(Source: ECI/ABP News/ABP Majha)
Video: குத்துச்சண்டை களமாக மாறிய துருக்கி நாடாளுமன்றம்: ரத்தம் சொட்ட சொட்ட அடித்துக்கொண்ட எம்.பிக்கள்
Turkey MP Fight: துருக்கி பாராளுமன்றத்தில் ஒருவரையொருவர் அடித்து கொண்ட சம்பவமானது, உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அட்டாலே என்பவர், ஆளும் கட்சியை கவிழ்க்க போராட்டம் நடத்தியதாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 18 ஆண்டுகாலம் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் , அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அடித்துக் கொண்ட எம்.பி-க்கள்:
இந்த தருணத்தில் சிறையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினரை , மீண்டும் அவையில் சேர்ப்பது குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அகமது ஷேக் பேரவைத் தலைவர் இருக்கைக்கு அருகே நின்று பேசிய கொண்டிருந்தார். அப்போது, அதிபர் எர்டோகன் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களை, தீவிரவாதிகள் என்று விமர்சித்தார். இதையடுத்து, ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், அவையின் இருக்கையில் இருந்து எழுந்து, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அகமது சேக்கின் கண்ணத்தில் தாக்கினார். மேலும் சிலர் உறுப்பினர் வந்து தாக்கி கீழே தள்ளினர்.
இதனால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் , அவையில் இருந்து எழுந்து வந்து, ஆளும் கட்சியினரை தாக்கினர். இதனால் , இருவரும், ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால், அவையில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
அதிர்ச்சியளிக்கும் காட்சிகள்:
இதனால், அவையில் இருந்து பெண் எம்.பி-க்கள் செய்வதறியாது திகைத்தனர்.
மோதல்களால், நாடாளுமன்றமே வன்முறை களமாக மாறியது. மேலும் , மோதலுக்கு பின், நாடாளுமன்றத்தின் தரையில் ரத்த கறைகள் இருக்கும் காட்சிகள் அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தது.
இந்த காட்சிகளில் ரத்த கறைகள் இருப்பதால், மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்த கூடும் என எச்சரிக்கிறோம்.
🚨NEWS:
— Meytar (@Meytar_D) August 16, 2024
A fight in the Turkish Parliament today ended in blood. It appears that Turks are incapable of civil debate... only violence. Sad.#Turkey #Turks #NATO #News pic.twitter.com/K4nWZJCrVh
🚨NEWS:
— Meytar (@Meytar_D) August 16, 2024
A fight in the Turkish Parliament today ended in blood. It appears that Turks are incapable of civil debate... only violence. Sad.#Turkey #Turks #NATO #News pic.twitter.com/K4nWZJCrVh
Also Read: Water In Mars: செவ்வாய் கோளில் கடலே உள்ளது: நாசா விண்கலம் அசத்தல் கண்டுபிடிப்பு..!