மேலும் அறிய

Trump in Iran Nuclear Talks: நேரடியாக மறைமுகமாக ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் ட்ரம்ப்; புரியலைல்ல.? செய்திய படிங்க

ஜெனீவாவில் இன்று நடைபெறும் ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்க உள்ளார். ஆனால் நேரடியாக அல்ல, மறைமுகமாக பங்கேற்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு என்ன அர்த்தம்.?

அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக, அமெரிக்கா ஈரான் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதற்காக பலமுறை ஈரானுக்கு ட்ரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், ஒருபுறம் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், இன்று ஜெனீவாவில் நடைபெறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், தான் மறைமுகமாக ஈடுபடப் போவதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது, ஜெனீவாவில் இன்று தொடங்கவுள்ள ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து, அந்நாட்டு பிரநிதிகளுக்கும்ம அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் "மறைமுகமாக" ஈடுபட உள்ளதாகவும், அது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் கூறினார். தெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் இதுவரை அமெரிக்க பிரதிநிதிகளே ஈடுபட்டுவரும் நிலையில், முதல் முறையாக அதிபர் ட்ரம்ப் அதில் பங்கெடுக்க உள்ளார். ஆனால், நேரடியாக சென்று அல்ல, மறைமுகமாக என்று அவர் கூறியுள்ளார். ஒருவேளை, தொலைபேசி வாயிலாகவோ, காணொலி வாயிலாகவோ அவர்  பங்கேற்கலாம். இருந்தாலும், இந்த பேச்சுவார்த்தையில் அவர் நேரடியாக பங்கெடுப்பது இதுவே முதல் முறையாகும்.

ஒரு ஒப்பந்தத்திற்கான வாய்ப்புகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ஈரான் கடுமையான பேச்சுவார்த்தைகளை நாடியது. ஆனால், கடந்த கோடையில் அமெரிக்கா ஈரானிய அணுசக்தி தளங்களை குண்டுவீசித் தாக்கியபோது, அத்தகைய கடினமான நிலைப்பாட்டின் விளைவுகளை கற்றுக்கொண்டேன்“ என கூறினார். அதன் விளைவாக, இந்த முறை ஈரானியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உந்துதல் பெற்றதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

மேலும், "ஒரு ஒப்பந்தம் செய்யாததன் விளைவுகளை அவர்கள் விரும்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை," என்றும், அவர்களின் அணுசக்தி திறனை அழிக்க B-2 ரக விமானங்களை அனுப்புவதற்கு பதிலாக ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

நிபந்தனை விதித்த ஈரான்

ஜெனீவாவில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் அரசு அமெரிக்காவிற்கு ஒரு நிபந்தனையை நேற்று விதித்தது. அதன்படி, பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்க முன்வந்தால், அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள தேவையான சமரசங்களை பரிசீலிக்க தயாராக உள்ளதாக ஈரான் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மஜித் தக்த் ரவாஞ்சி கூறினார்.

ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், கடுமையான பொருளாதாரத் தடைகளை நீக்குவது தொடர்பாக பேச அமெரிக்கா முன்வர வேண்டும் என்றும் அதன் பின்னர் அணுசக்தி ஒப்பந்தம் எட்டுவது குறித்து பேச ஈரான் தயாராக உள்ளது என்றும் மஜித் கூறினார்.

ட்ரம்ப்பின் முடிவு குறித்து எதிர்பார்ப்பு

ஓமனில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், அதில் ட்ரம்ப் எவ்வாறு பங்கேற்பார், ஈரான் விதித்த நிபந்தனை குறித்து அவர் என்ன முடிவெடுப்பார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.

 

 

தலைப்பு செய்திகள்

Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget