(Source: Poll of Polls)
Turkey Earthquake: துருக்கி - சிரியா நிலநடுக்கம்: 41,000-ஐ கடந்த உயிரிழப்பு.. நிறைவுக்கு வரும் மீட்பு பணிகள்..
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41,000-ஐ கடந்து பதிவாகியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41,000-ஐ கடந்து பதிவாகியுள்ளது.
கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகு நேற்று துருக்கியில் இடிபாடுகளில் இருந்து தப்பிய ஒன்பது பேர் மீட்கப்பட்டனர். தற்போது கடுமையான குளிரில் தங்குமிடம் அல்லது போதுமான உணவு இல்லாமல் போராடும் மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பேரழிவில், துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் 41,000 க்கும் அதிகமான இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இரு நாடுகளிலும் சேதத்தின் அளவு உச்சத்தில் உள்ளது. கடும் குளிரில் உயிர் பிழைத்தாலும் அவர்கள் தங்குவதற்கு இடமில்லாத சூழல் நிலவி வருகிறது.
பிப்ரவரி 6 அன்று ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் சூழ்நிலை தற்போது கட்டுக்குள் இருப்பதாக துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகன் தெரிவித்தார். எர்டோகன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், “நம் நாட்டில் மட்டுமல்ல, மனிதகுல வரலாற்றிலும் மிகப்பெரிய இயற்கை பேரழிவுகளில் ஒன்றை நாங்கள் எதிர்கொள்கிறோம்” எனக் கூறினார்.
செவ்வாயன்று 17 மற்றும் 21 வயதுடைய இரண்டு சகோதரர்கள், கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மீட்கப்பட்டனர். மேலும் சிறுத்தை அச்சு அணிந்த சிரிய ஆணும் இளம் பெண்ணும் 200 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர். இன்னும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்று மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். ஆனால், தங்குமிடம், உணவு மற்றும் பள்ளிப்படிப்பு ஆகியவற்றில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு மீட்புப் பணிகள் நிறைவுக்கு வருவதாக ஐ.நா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
"நாங்கள் தங்குவதற்கு ஏதேனும் ஒரு இடம் கேட்டோம், ஆனால் இதுவரை நாங்கள் எதையும் பெறவில்லை" என்று துருக்கியின் தென்கிழக்கு நகரமான காசியான்டெப்பில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த அகதி ஹசன் சைமோவா கூறினார். சைமோவா மற்றும் பிற சிரியர்கள் அங்கு நடந்த போரில் இருந்து காஜியான்டெப்பில் தஞ்சம் அடைந்தனர், ஆனால் நிலநடுக்கத்தால் வீடற்றவர்கள் ஆனார்கள்.
இரு நாடுகளிலும் உள்ள சுமார் 26 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவை. குளிர் காலநிலை, சுகாதாரம் மற்றும் தொற்று நோய்கள் பரவுதல் ஆகியவற்றுடன் அதிகரித்து வரும் சூழல் உள்ளது.
தெற்கு நகரமான இஸ்கெண்டருனில் உள்ள துருக்கிய கள மருத்துவமனையில், இந்திய ராணுவ மேஜர் பீனா திவாரி கூறுகையில், முதலில் மக்கள் உடலில் ஏற்பட்ட காயங்களுடன் வந்தனர். ஆனால் தற்போது மன உளைச்சளுக்கும், மனதில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள முடியாமல் அதற்கு சிகிச்சை பெற வருகிறார்கள் என கூறினார்.
சிரியாவில் கிட்டத்தட்ட 9 மில்லியன் மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை 400 மில்லியன் டாலர் நிதியை அளித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் தனது தேடுதல் மற்றும் மீட்புப் பணியை முடித்துக் கொண்டு, திரும்பப் பெற இருப்பதாக வருவதாக ரஷ்யா கூறியது, துருக்கியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35, 3418 ஆக உள்ளது என்று எர்டோகன் கூறினார்.