Free Condom: காதலர் தின ஸ்பெஷல்.. 9.5 கோடி காண்டம் இலவச சப்ளை..! என்னப்பா சொல்றீங்க..?
பாலியல் நோய்களை தடுக்கும் விதமாகவும் இளம் வயதில் கர்ப்பமாதலை தடுக்க விதமாகவும் ஆணுறைகளை வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தானது, சுற்றுலா தளத்துக்கு மிகவும் பிரபலமான நாடாக இருந்து வருகிறது. ஏதாவது சிறப்பான தினங்களில், பலரும் செல்ல கூடிய இடமாகவும் தாய்லாந்து உள்ளது.
இந்நிலையில், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமானது உலக முழுவதும் காதலர்கள் கொண்டாட தினமாக பார்க்கப்படுகிறது.
தாய்லாந்து அரசு திட்டம்
இந்நிலையில் காதலர் தினத்திற்கு முன்னதாக பாதுகாப்பான உடலுறவை அறிவுறுத்துவதற்காக பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் இளமை கால கர்ப்பத்தைத் தடுக்க 9.5 கோடி அளவிலான இலவச ஆணுறைகளை விநியோகிக்க தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து, பிப்ரவரி 1ம் தேதி(நேற்று) முதல், உலகளாவிய சுகாதார அட்டைதாரர்கள் ஒரு வருடத்திற்கு, வாரத்திற்கு 10 ஆணுறைகளைப் பெற தகுதியுடையவர்கள் என்று தாய்லாந்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் ரச்சடா தானாடிரெக் செவ்வாய்க்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆணுறைகள் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை ப்ளும்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு 95 மில்லியன் ஆணுறைகளை இலவசமாக வழங்கவும் அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
Thailand plans to distribute 95 million free condoms to curb sexually transmitted diseases and teen pregnancy as the Southeast Asian nation seeks to promote safe sex ahead of Valentine’s Day https://t.co/aAB4EwCBd4
— Bloomberg (@business) January 31, 2023
பிப்ரவரி 14
பிப்ரவரி 14 ஆம் தேதி, உலகம் முழுதும் சிவப்பு நிறமாய் மாறும் நாள். தங்கள் காதலை சொல்ல, உறவைக் கொண்டாட, உணவு, இனிப்புகள், பூக்கள், பரிசுகள் என பணம் அதிகம் புரளும் நாளும் அது தான். ஏன் இந்த பிப்ரவரி வாரம் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது? உலகம் முழுவதையும் இணைக்கும் வியாபார நாளாய் மாறும் அளவிற்கு இந்த நாள் எப்படி ஒரு இணைப்புப் புள்ளியாய் இருக்கிறது என்பது நிச்சயம் ஆச்சரியம் ஏற்படுத்தும் ஒன்றுதான். இந்த நாளின் வரலாற்றைப் பார்க்கலாம்.
மூன்றாம் நூற்றாண்டின் ரோமானிய புனிதர் வேலன்டைனின் நினைவாக இந்த நாள் கொண்டாடப் படுகிறது. ரோமானியப் பேரரசிடமிருந்து காப்பாற்றி ரகசியமாக கிறுத்துவ தம்பதிகளுக்குத் திருமணம் செய்தது இவரது மரணத் தண்டனைக்குக் காரணமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து இந்த நாள் காதலர் தினமாக வளர்ந்தது என்ற கருத்து பரவலாக சொல்லப்படுகிறது.