மேலும் அறிய

kuwait Fire Accident: குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

குவைத் மங்காப் நகரில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 40க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இறந்தவர்களில் தமிழர்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Kuwait Fire Accident: குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்காப் நகரில் உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ  விபத்தில் வடஇந்தியர் இருவர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.

கட்டடத்தில் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தில்  சிக்கி பலர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த  கே.ஜி. ஆபிரகாம் என்ற தொழிலதிபருக்குச் சொந்தமான கட்டடத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

தீ விபத்து ஏற்பட காரணம் என்ன? அந்த கட்டடத்தில் மலையாளிகள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியிட்ட குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம், "ஆபத்தான நிலையில் உள்ள சிலர் உட்பட காயமடைந்த அனைவரும் தேவையான மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கட்டட தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4:30 மணியளவில் சமையலறையில் முதலில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தீயைக் கண்டதும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிலர் கீழே குதித்துள்ளனர். அதில் சிலர் மரணம் அடைந்திருக்கின்றனர். மற்றவர்கள், தீக்காயங்களாலும் புகையை சுவாசித்ததாலும் உயிரிழந்திருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரங்கல் தெரிவித்த இந்தியா: விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "குவைத் நகரில் தீ விபத்து ஏற்பட்ட செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன். இதில், 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் தூதர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எமது தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும் குவைத் தீ விபத்து சம்பவத்தின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பாதிக்கப்பட்டோருக்கு இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

கட்டிடத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஆனால், கட்டிடத்தில் சிலர் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget