மேலும் அறிய

வங்காள தேசத்தில் பதற்றம்.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை - இந்திய தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போராட்டம் வன்முறையாக மாறியதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக மொபைல் இணைய சேவை முடக்கப்பட்டது

வங்காள தேசத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தால் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆகையால் அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் மற்றும் ராணுவ துறை சார்ந்த வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இட ஒதுக்கீட்டில் முறைகேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

மேலும், இது தொடர்பாக டாக்கா ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. அப்போது ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது. இதனையடுத்து டாக்காவில் உள்ள ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அதேசமயம் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவினர் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே வன்முறை ஏற்பட்டது. இதில் 15 போலீசார் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். 

வங்காள தேசத்தில் பதற்றம்.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை -  இந்திய தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வன்முறையில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவ, மாணவிகளுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றது.  அதேவேளை, போராட்டக்காரர்களை அந்நாட்டு அரசு அடக்கி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்து வருகின்றனர். இதனால் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த போராட்டத்தில் நடந்த வன்முறையில் ஏற்கனவே 6 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. போராட்டம் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில் வங்காளதேசம் செல்வதை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையாக மாறியதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக மொபைல் இணைய சேவை முடக்கப்பட்டது.

இந்நிலையில் அமைதி காக்குமாறு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வங்காள தேசத்தில் பதற்றம்.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை -  இந்திய தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

இதனை தொடர்ந்து, டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், 'நாட்டில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, வங்காளதேசத்தில் உள்ள இந்திய சமூகத்தினர் மற்றும் மாணவர்கள் தங்கள் வளாகத்தை விட்டு வெளியே செல்வதைக் குறைக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். மேலும் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக அவசர தேவைக்கு அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சித்த எஸ்.பி.வேலுமணி” வழக்கு பதிவு செய்தாரா ஸ்டாலின்? பரபரப்பு புகார்!
“அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சித்த எஸ்.பி.வேலுமணி” வழக்கு பதிவு செய்தாரா ஸ்டாலின்? பரபரப்பு புகார்!
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
Weather Update :  “அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்” எங்கே மழை ? எங்கே வெயில்..? இதோ அப்டேட்!
Weather Update : “அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்” எங்கே மழை ? எங்கே வெயில்..? இதோ அப்டேட்!
One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் அவ்ளோ ஈசியா? கடக்க வேண்டிய அரசியலமைப்புச் சிக்கல்கள் இவ்ளோ இருக்கே..!
One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் அவ்ளோ ஈசியா? கடக்க வேண்டிய அரசியலமைப்புச் சிக்கல்கள் இவ்ளோ இருக்கே..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்Thirumavalavan Meet Buddhist : தேம்பி அழுத புத்த பிட்சு..கண்ணீரை துடைத்த திருமா”தைரியமா இருங்க ஐயா”Arun IPS | அடுத்தடுத்த ENCOUNTER நடுங்கும் ரவுடிகள்..அலறவிட்ட அருண் IPSRowdy Kakkathoppu Balaji Profile | டீனேஜில் தடம் மாறிய சிறுவன்..வட சென்னை DON-ஆன கதை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சித்த எஸ்.பி.வேலுமணி” வழக்கு பதிவு செய்தாரா ஸ்டாலின்? பரபரப்பு புகார்!
“அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சித்த எஸ்.பி.வேலுமணி” வழக்கு பதிவு செய்தாரா ஸ்டாலின்? பரபரப்பு புகார்!
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
Weather Update :  “அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்” எங்கே மழை ? எங்கே வெயில்..? இதோ அப்டேட்!
Weather Update : “அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்” எங்கே மழை ? எங்கே வெயில்..? இதோ அப்டேட்!
One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் அவ்ளோ ஈசியா? கடக்க வேண்டிய அரசியலமைப்புச் சிக்கல்கள் இவ்ளோ இருக்கே..!
One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் அவ்ளோ ஈசியா? கடக்க வேண்டிய அரசியலமைப்புச் சிக்கல்கள் இவ்ளோ இருக்கே..!
நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி; தமிழக - கேரள எல்லையில் தீவிர சோதனை
நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி; தமிழக - கேரள எல்லையில் தீவிர சோதனை
“திமுக, அதிமுகவிடம் கெஞ்சுபவர்கள் அல்ல நாங்கள்” மீண்டும் கொதித்தெழுந்த திருமா..!
“திமுக, அதிமுகவிடம் கெஞ்சுபவர்கள் அல்ல நாங்கள்” மீண்டும் கொதித்தெழுந்த திருமா..!
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
Jani Master :
Jani Master : "பாலியல் புகார் சிக்கல்” பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கைது..!
Embed widget