மேலும் அறிய

Australia Gunshoot: ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல்.. ஆஸ்திரேலிய போலீஸார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழர்..

ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டதாக, தமிழ்நாட்டை சேர்ந்தவர் மீது ஆஸ்திரேலிய போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

ஆஸ்ரேலியாவில் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டை சேர்ந்த சையது அகமது என்பவர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் அவர் உயிரிழந்தார்

ஆஸ்திரேலியாவில் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று சிட்னி. இங்கு இந்தியர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். நேற்று மதியம் 12.30 மணிக்கு சிட்னி மேற்குப்பகுதியில் உள்ள அபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மை பணி செய்து கொண்டிருந்த நபரை, ரயிலில் இருந்து வந்த ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். பட்டப்பகலில் இந்த சம்பவம் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து அங்கிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு கத்தியால் குத்திய நபரை பிடிக்க முயற்சி செய்தனர்.

அப்போது அந்த நபர் போலீசாரையும் கத்தியால் மிரட்டி தாக்க முயற்சித்துள்ளார். இதனால் அந்த நபரை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 2 குண்டுகள் நெஞ்சில் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்தார். கத்திக்குத்து நடத்திய நபர் யார் என விசாரணை மேற்கொண்டபோது இறந்தவர் பெயர் முகமது ரகமத்துல்லா சையது அகமது என்பதும், அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர் தஞ்சை மாவட்டம், அதிராமபட்டினத்தை சேர்ந்தவர்.

மேலும் இவர் தற்காலிக விசாவில் அஸ்திரேலியாவில் தங்கியிருந்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த நபர் இந்த கத்திக்குத்து சம்பவம் நடத்துவதற்கான காரணம் என்ன என்பது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலகளவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பலர் கண்டனங்களை தெரிவித்தாலும் துப்பாக்கிச்சூடு நின்ற பாடில்லை. சமீபத்தில்தான், கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அதில், ஆறு மாத குழந்தை, 17 வயது தாய் உள்பட மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டனர். மத்திய கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது.

விசாலியா நகரத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கோஷன் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து அதிகாலை துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டது போன்ற சத்தம் கேட்டுள்ளது. 

இதேபோல, வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். 

அமெரிக்காவில் நடைபெறும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, சமீபத்தில், பிரதிநிதிகள் சபையில் முதல் முறையாக பயங்கர ஆயுதங்களை தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவில் துப்பாக்கி சீர்திருத்தம் மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரமாக உள்ளது. இதேபோல, 1994 இல், ரைபிள்ஸ் மற்றும் சில உயர் திறன் துப்பாகிகளை பயன்படுத்த 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் பஃபேலோவில் உள்ள பல்பொருள் அங்காடியில் 10 ஆப்பிரிக்க அமெரிக்கர்களை வெள்ளை இன வெறியர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.

அதே மாதம், உவால்டேவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் 18 வயது இளைஞரால் 19 பள்ளி மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். ஹைலேண்ட் பூங்காவில் ஜூலை 4 அணிவகுப்பில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உவால்டே படுகொலைக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மீண்டும் துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவற்றை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 18 முதல் 21 ஆக உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அத்தகைய தடை, அரசியலமைப்பு உரிமைக்கு எதிரானது என்று கருதுகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Actor Sathyaraj:
"மதவாதிகளுக்கு நாங்க பிரச்னை இல்லை.! சேகர்பாபுதான் பிரச்னை ": நடிகர் சத்யராஜ் அதிரடி.!
வெடிக்குறோம் கலக்குறோம்... குல்பி ஐஸ், டால்பின், டோரிமோன்... தீபாவளிக்கு விதவிதமான பட்டாசுகள் அறிமுகம்
வெடிக்குறோம் கலக்குறோம்... குல்பி ஐஸ், டால்பின், டோரிமோன்... தீபாவளிக்கு விதவிதமான பட்டாசுகள் அறிமுகம்
Embed widget