மேலும் அறிய

தலிபான்களிடம் சிக்கிய அமெரிக்க ராணுவ பயோமெட்ரிக் கருவிகள்: கதி கலங்கி நிற்கும் வீரர்கள்!

தலிபான்கள் கையில் இந்த கருவி சிக்கியுள்ளதால் அமெரிக்காவுக்கு ஆதரவாக பணியாற்றிய ஆப்கானிஸ்தான்வாசிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஏற்கனவே பேரழிவை ஏற்படுத்திவருகின்ற சூழலில் தற்போது அமெரிக்கர்களின் பயோமெட்ரிக் சாதனங்களையும் கைப்பற்றியிருப்பது அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க படைகளால் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட தலிபான்கள் தற்போது பல்வேறு வன்முறை நிகழ்வுகளை நிகழ்த்தி மீண்டும்  20 நாட்களில் தங்கள் தேசத்தை மறுபடியும் கைப்பற்றிவிட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டை முழுவதுமாக கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பினர், மீண்டும் தங்கள் ஆட்சியை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த  புதிய ஆட்சியில் பெண்களும் இடம்பெற வேண்டும் என்று தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தற்போது பழிவாங்கல் நடவடிக்கை இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • தலிபான்களிடம் சிக்கிய அமெரிக்க ராணுவ பயோமெட்ரிக் கருவிகள்: கதி கலங்கி நிற்கும் வீரர்கள்!


இதனிடையே தான் தற்போது அமெரிக்காவின் பயோமெட்ரிக் கருவியை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பயோமெட்ரிக் முறை என்பது ஒருவரின் அனைத்து விதமான தரவுகளை கண்டறியப்படுவது. கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் பயோமெட்ரிக் கருவிகளை தான் பயன்படுத்தி வந்தது.  கையடக்க ஒருங்கிணைப்பு அடையாளம் கண்டறிதல் உபகரணங்கள் (HIIDE) என்று அழைக்கப்படும் இந்த கருவியில் விழி ரேகை, கை ரேகை, அங்க அடையாளங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் ஒருவரின் முழு தகவல்களும் அரசு கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இதிலிருந்து ஏதாவது ஒரு தரசு கசிந்துவிட்டால், அதனை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கருவியைத் தான் தற்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் ஆகியோரைக் கண்டறிய இந்த கருவிகள் பயன்படுவதாக கூறப்படும் அதேவேளையில், அமெரிக்க ராணுவத்துக்கு உதவியாக இருந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பல்வேறு  நபர்களின் விவரங்களும் இந்த கருவியில் இடம்பெற்றுள்ளன. மேலும்  அமெரிக்க ராணுவத்துடனான கூட்டு முயற்சியில் ஈடுபட்ட உள்ளூர் மக்களின் தகவல்கள் இதில் சேகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது வெளியான செய்தியில்,  பயோமெட்ரிக் கருவியை இயக்க தலிபான்களுக்கு கூடுதல் கருவிகள் தேவைப்படும் எனினும் பாகிஸ்தான் அதனை வழங்கக்கூடும் என முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

  • தலிபான்களிடம் சிக்கிய அமெரிக்க ராணுவ பயோமெட்ரிக் கருவிகள்: கதி கலங்கி நிற்கும் வீரர்கள்!

    குறிப்பாக இந்த கருவியை நீண்ட காலமாகவே அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக அமெரிக்க நடத்திய தேடுதல் வேட்டையின்போது இந்த கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தலிபான்கள் கையில் இந்த கருவி சிக்கியுள்ளதால் அமெரிக்காவுக்கு ஆதரவாக பணியாற்றிய ஆப்கானிஸ்தான்வாசிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக தாலிபான்கள் கையில் இந்த சிறிய அளவிலான கருவி சிக்கியுள்ளதால்  இதனை அமெரிக்காவிற்கு எதிராகப்பயன்பத்துவார்களா? மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவாக பணியாற்றிய ஆப்கானிஸ்தான் வாசிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Embed widget