மேலும் அறிய

Syria Attack : சிரியாவில் அடுத்த சோகம்... ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு துப்பாக்கிச் சூடு: 53 பேர் உயிரிழப்பு!

சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில 7 ராணுவ வீரர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Syria Attack : சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில 7 ராணுவ வீரர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் சோகம்

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐ.எஸ் பயங்கர வாதிகளுக்கு இடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. அங்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. ஐ.எஸ் போன்று சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. பயங்கரவாத அமைப்பை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுமட்டுமின்றி, இஸ்ரேலும், அமெரிக்காவும் சிரியாவில் உள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து வான்வெளி தாக்குதல்களும் நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், பயங்கரவாத அமைப்புகளும் பொதுமக்களை குறித்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்ஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் 53 பேர் உயிரிழந்ததாக அரசு ஊடகம்  தெரிவித்துள்ளது.

அரசு தரப்பில் கூறியதாவது, ”அல்-சோக்னா நகரின் தென்மேற்கு நகரில் சாலையில் இருந்த பொதுமக்கள் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 53 பேர் உயிரிழந்ததகவும் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் 46 பேர் பொது மக்கள், 7 பேர் ராணுவ வீரர்கள். பலியானவர்களின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

ஏவுகணை தாக்குதல்

இதற்கிடையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் இஸ்ரேல், சிரியா நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியா நாட்டின் டமாஸ்கஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல் 15 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது. டமாஸ்கஸ் பகுதியில் உள்ள குடியிருப்பின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

டமாஸ்கஸ் நகரில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. குடியிருப்புகளை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. மேற்கத்திய உளவுத்துறை வட்டாரங்களின்படி, ஈரான் கடந்த சில ஆண்டுகளாகவே சிரியாவில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் சிரியா விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல்-சிரியா படைகளுக்கு இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த இரு படைகளுக்கும் இடையே வான் வழி தாக்குதல் மீண்டும் அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் படைகள் தாக்குதல் நடத்தியது. அதன்பின்னர் காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல்-சிரியா இடையேயான சண்டை நீண்டகாலமாக நடந்து வந்தாலும் தற்போது மீண்டும் தலைதூக்கக் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு தான் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல உயிர்கள் பலியானது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தற்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 53 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

Contact Lens : உஷார் மக்களே..கான்டாக்ட் லென்ஸ் உடன் தூங்கியதால் வந்த வினை.. பார்வைபோன பயங்கரம்..

தலைப்பு செய்திகள்

Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
Embed widget