Swiss Longest Train: ஆல்ப்ஸ் மலைகளை ஊடுருவிச்செல்லும் உலகின் மிக நீளமான பயணிகள் ரயில்.. சாதனை படைத்த ஸ்விட்சர்லாந்து!
ஆல்ப்ஸ் மலைகளை ஊடுருவிச் செல்லும் 4550 இருக்கைகளை கொண்ட உலகின் மிக நீளமான ரயிலை சுவிட்சர்லாந்து இயக்கி சாதனை படைத்துள்ளது.
![Swiss Longest Train: ஆல்ப்ஸ் மலைகளை ஊடுருவிச்செல்லும் உலகின் மிக நீளமான பயணிகள் ரயில்.. சாதனை படைத்த ஸ்விட்சர்லாந்து! Swiss Railway Claims World Record for the Longest Train With a Special 100-Coach Train Swiss Longest Train: ஆல்ப்ஸ் மலைகளை ஊடுருவிச்செல்லும் உலகின் மிக நீளமான பயணிகள் ரயில்.. சாதனை படைத்த ஸ்விட்சர்லாந்து!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/4819057f08b3ce4fea58808ff820a54d1667358173241109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆல்ப்ஸ் மலைகளை ஊடுருவிச் செல்லும் உலகின் மிக நீளமான ரயிலை சுவிட்சர்லாந்து இயக்கி சாதனை படைத்துள்ளது. உலகின் மிக நீளமான ரயிலை உடைய நாடு என்ற பெருமையை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது. இந்த ரயிலின் சிறப்பு என்னவென்றால் ஒரே நேரத்தில் ஏழு ஓட்டுநர்களால் இந்த ரயில் ஒருங்கிணைக்கப்பட்டு செல்கிறது.
4550 இருக்கைகளை கொண்ட இந்த சாதனை ரயிலானது உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த உலகின் மிகப்பெரிய ரயிலில் பயணிப்பதன் மூலம் ஆப்ஸ் மலைத்தொடரின் அழகினை நாம் கண்டு ரசிக்கலாம். இதுவே உலகின் மிக அழகான ரயில் பாதையும் கூட என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் 100 பெட்டிகளைக் கொண்ட உலகின் மிக நீளமான இந்த ரயிலை உலக சாதனை பட்டியலில் சேர்க்குமாறு சுவிட்சர்லாந்து அங்கீகாரம் கோரியுள்ளது. சுவிஸ் ரயிலின் 175வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த உலகின் மிகப்பெரிய ரயில் இயக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரியங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ரயிலை உருவாக்கி இயக்கியதாக அந்நாட்டு ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
சுவிஸ் ரயில்வேயுடன் ,ரேடியன் ரயில்வே நிறுவனம் இணைந்து தயாரித்த , 100 பெட்டிகளைக் கொண்ட இந்த ஒரே ரயிலின் நீளம் சுமார் 2 கிலோமீட்டர் வரை உள்ளது. 7 ரயில் ஓட்டுநர்கள் மற்றும் 21 தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றும் வகையில் சிறப்பு நவீன தொடர்பாடல் கட்டமைப்பும் இந்த ரயிலில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
The Rhaetian Railway RhB நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ரயில், 22 சுரங்கப் பாதைகள் மற்றும் 48 பாலங்களை கடந்து யுனெஸ்கோ உலக பாரம்பரிய ஆல்புலா ,பெர்னினா பாதையில் பயணிக்கிறது.
ஸ்விட்சர்லாந்தின் சுற்றுலாத்துறை கொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் , இது ரயில்வே துறையின் வருமானத்திலும் மிக மோசமான விளைவை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆகவே இந்த உலகின் மிக நீளமான ரயிலில் பயணிக்க அநேக நாடுகளை சேர்ந்த மக்கள் வருவார்கள் எனவும் மீண்டும் நாட்டின் பொருளாதாரம் வழமைக்கு திரும்பும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ரயில் பயணத்தின் அழகை ரசிக்கவே உலக நாடுகளில் இருந்தும் பல மக்கள் அங்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த கொரோனா காலத்தில் ஸ்விட்சர்லாந்து ரயில்வே துறையின் வருமானத்தில் 35 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டதாகவும் அதனை ஈடு செய்யும் வகையில் தற்போது சுற்றுலாத்துறை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
2 கிலோமீட்டர்கள் வரை நீளம் கொண்ட இந்த சாதனை ரயிலில், ஆல்ப்ஸ் மலைத்தொடர் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் ,25 கிலோ மீட்டர் வரை சுற்றி பார்க்கலாமென கூறப்படுகிறது. ஜன்னல் ஓர இருக்கைகளில் அமர்ந்து கொண்ட இயற்கையின் அழகை ரசிப்பதில் சுற்றுலா பயணிகளுக்கு அலாதி பிரியமுண்டு. அதிலும் ஸ்வீட்சர்லாந்து போன்ற இயற்கை வளம் மிக்க, உலக அழகையே தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஆல்ப்ஸ் மலை தொடரில் பயணிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. பச்சை இலை காடுகளும் ,பனி போர்த்திய மலைமுகடுகளும் ,கண்களை கவரும் அழகிய மலர் வனங்களும் பெருமை சேர்க்கின்றன.
ஆகவே ஸ்வீட்சர்லாந்து நாட்டின் இயற்கை வனப்பை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில், அந்நாட்டை சேர்ந்த ரெசின் ரயில்வே நிறுவனம் உலகின் மிகப்பெரிய பயணிகள் ரயிலை உருவாக்கும் முயற்சியில் இறங்கி தற்போது வெற்றியும் கண்டுள்ளது.
உலகின் மிக நீளமான இந்த ரயில் பயணித்த 25 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பாதையானது கடந்த 2008 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் பாதை வழியாக பயணிக்க சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் தேவைப்படுகிறது .இதில் 48 சுரங்கப் பாதைகளை கடந்து பயணிக்க வேண்டி இருக்கிறது. இந்த பாதை வழியே பல்வேறு பாரம்பரிய சின்னங்கள், இயற்கை அழகு மிக்க பழங்கால இடங்கள் என பலவற்றை காணலாம்.
ஸ்விஸ் ரயில்வேயின் 175 ஆம் ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என ரேஸியன் ரயில்வே இயக்குநர் ரெனாடோ ஃபாசியாட்டிஃபாசியாட்டி தெரிவித்திருக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)