Sunita Williams: பொட்டி படுக்கையுடன் சுனிதா வில்லியம்ஸ் தயார், விண்வெளியில் முக்கிய பணிகள், பூமி திரும்புவது எப்போது? எப்படி?
Nasa Astronaut Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்புவதற்கு முன்பு, அங்கு பல முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளன.

Nasa Astronaut Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்புவது எப்போது என்ற தகவல்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது?
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனை பயணத்தில் 8 நாட்களுக்கு திட்டமிட்டு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆராய்ச்சியாளரான சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஜுன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். ஆனால், அவர் பயணித்த விண்வெளி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பூமிக்கு திரும்ப முடியாமல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் தான் அவரை மீட்கும் நோக்கில் விண்ணில் செலுத்தப்பட்ட, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ 10 ஃபால்கன் 9 விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கியுள்ளது. அதன்மூலம், வரும் புதன்கிழமை (மார்ச்-19) அன்று விடியற்காலை முதல் அன்றைய நாள் முடிவதற்குள், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் உள்ளிட்ட நாசா ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கு திரும்ப உள்ளனர்.
விண்வெளியில் முக்கிய பணிகள்:
1. புதிய குழுவிற்கு பயிற்சி
சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் புதிய ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவை, ஏற்கனவே அங்குள்ள குழு வரவேற்கும். தொடர்ந்து தொடர்ச்சியான அறிவியல் பரிசோதனைகள் மற்றும் நிலைய நெறிமுறைகள் வழங்கப்படும். சர்வதேச விண்வெளி நிலையத்தில் தினசரி வழக்கங்கள், நிலைய அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், குறிப்பிட்ட செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு பணிகள் எடுத்துரைக்கப்படும். இதுசர்வதேச விண்வெளி நிலையத்தின் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதி செய்யும். இதன் மூலம் புதிய ஆராய்ச்சியாளர்கள் முழு கட்டுப்பாட்டையும் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் குழுவின் மேற்பார்வையின் கீழ் நேரடி அனுபவத்தைப் பெற முடியும்.
2. பூமியை நோக்கிய சுனிதா குழுவினரின் பயணம்:
புதிய குழுவினர்டம் பொறுப்புகளை ஒப்படைத்த பின்னர் சுனிதா வில்லியம்ஸின் குழுவானது டிராகன் "ஃப்ரீடம்" விண்கலத்தில் பூமியை நோக்கி புறப்படத் தயாராகும். இதில்,
- தனிப்பட்ட உடமைகளை பேக்கிங் செய்தல் மற்றும் திரும்பப் பெறுவதற்கான பரிசோதனை மாதிரிகள்
- அமைப்பு சோதனைகள் மற்றும் சேமிப்பகத்துடன் விண்கலத்தை புறப்படுவதற்குத் தயார்படுத்துதல்அனைத்து இறுதி பாதுகாப்பு நடைமுறைகளும் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்தல் ஆகிய பணிகள் அடங்கும்.
மேற்குறிப்பிடப்பட்ட பணிகள் முடிந்ததும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, சுனிதா குழுவினர் அடங்கிய விண்கலம்பிரிந்து பூமியை நோக்கி மெதுவாக பயணிக்க தொடங்கும். நேரல் செல்ல செல்ல மெதுவாக அதன் வேகம் கூட்டப்படும்.
3. பூமிக்கு திரும்புதல்
சர்வதேச விமான நிலையத்திலிருந்துபாதுகாப்பான தூரம் அடைந்தவுடன், பூமிக்கு திரும்பும் பணி தொடங்குகிறது. அதன்படி,
- விண்கலத்தின் வேகம் மணிக்கு சுமார் 500-800 கிமீ ஆக குறைக்கப்படும். இந்த நடவடிக்கை பூமியின் ஈர்ப்பு விசை படிப்படியாக விண்கலத்தை வளிமண்டலத்திற்குள் இழுக்க அனுமதிக்கிறது.
- விண்கலம் கார்மன் கோட்டை நோக்கி (100 கி.மீ உயரம்) இறங்கும்போது, அது இன்னும் மணிக்கு 28,000 கி.மீ வேகத்தில் நகர்கிறது. வளிமண்டல இழுவை அதன் வேகத்தை மேலும் குறைக்கும், உராய்வு காரணமாக விண்கலத்தைச் சுற்றி கடுமையான வெப்பத்தை உருவாக்கும். வெப்பக் கவசம் இந்தக் கட்டத்தில் உருவாகும் தீவிர வெப்பநிலையிலிருந்து குழுவினரைப் பாதுகாக்கும். உயரம் குறையும்போது , அதன் வேகம் கணிசமாகக் குறைந்து, மணிக்கு 480-640 கிமீ வேகத்தை நெருங்கும்.
- விண்கலம் 2-3 கி.மீ உயரத்தை நெருங்கும்போது, தொடர்ச்சியான பாராசூட்டுகள் பயன்படுத்தப்படும், இதன் மூலம் வேகம் மணிக்கு 24-32 கி.மீ ஆகக் குறைக்கப்படும். இது பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் விண்கலம் கடலில் இறங்குவதை உறுதி செய்கிறது.
- பொதுவாக அட்லாண்டிக் பெருங்கடல் அல்லது மெக்சிகோ வளைகுடாவில், நியமிக்கப்பட்ட மீட்பு மண்டலத்தில் விண்கலம் தரையிறங்கும். மீட்புக் குழுக்கள் விரைவாக அதனை அடைந்து, அதைப் பாதுகாத்து, குழுவினருக்கு வெளியேற்றுவார்கள்.
- தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படும்
எதிர்பாராமல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வ்ல்மோர், பாதுகாப்பாக பூமி திரும்புவதை ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

