Video : பயம்.. கொடூரம்.. உக்ரைன் தெருக்களில் சிதறிக்கிடக்கும் பிணங்கள்.. போர்களத்தின் கோர முகம்.. வீடியோ
உக்ரைன் நகரில் உள்ள சாலைகள் இறந்த உடல்களுடன் காட்சியளிக்கும் அவலம்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கான போர் தொடர்ந்து 30 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. உக்ரைன் நகரின் பல்வேறு பகுதிகள் ரஷ்யாவின் தாக்குதலில் மோசமாக பாதிக்கப்பட்டன. கிவ் பகுதியில் உள்ள அரசு கட்டிடங்கள், கல்வி நிறுவங்கள் உள்பட பல லட்சக்கணக்கான மக்கள் போரில் மாண்டனர்.
இந்நிலையில், உக்ரைன் தலைநகருக்கு அருகில் உள்ள சில முக்கிய முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள பல பிராந்தியங்களில் ரஷ்யா மீண்டும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
மேலும், கிவ், இர்பின், புச்சா,கோஸ்ட்மால் போன்ற இடங்களில் ரஷ்யா நடத்திய தாக்குதலின் விளைவுகள் பற்றியும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
புச்சா நகர் முழுக்க தாக்குதலில் இறந்த உடல்களால் நிரம்பியிருக்கும் காட்சிகளை உக்ரைன் ராணுவம் பகிர்ந்துள்ளது.ரஷ்யா தாக்குதல் நடத்திய பகுதிகளை கைப்பற்றியுள்ள உக்ரைன் ராணுவம் அப்பகுதிகளில் ராணுவ வீரர்களை விட, மக்கள் அதிகமாக ரஷ்யாவின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.
My brother sent this to me. Town of Bucha northwest of Kyiv. The amount of dead citizens on one street alone…I just can’t even process. pic.twitter.com/KOSwISih6N
— Viktoriia 🇺🇸🇺🇦 (@ViktoriiaUAH) April 1, 2022
புச்சா நகரில் 20க்கும் மேற்பட்ட ஆண்களின் கைகள் கட்டப்பட்டு அவர்களின் பின் தலையில் சுடப்பட்டு இறந்து கிடப்பதாக ராணுவ வீரர்கள் கூறினர்.
மேலும், இறந்து கிடப்பவர்கள் எல்லாரும், ரஷ்யாவின் ஒரு மாதத்திற்கும் மேலான போரில் இறந்ததாக கூறினர்.
புச்சா நகரில் கிடக்கும் மனித உடல்களில், ஒருவர் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது கொல்லப்பட்டுள்ளார். பலரது கைகளில் தங்களது கைகளில் ஷாப்பிங் சென்று வந்த பைகள் இருக்கின்றன. போரினால் ஏற்பட்ட அவலக் காட்சிகளை வாஸ்லி என்பவர் வேதனையுடன் அங்குள்ள காட்சிகளை பகிர்ந்து கொள்கிறார். அதில் இறந்து கிடந்த ஒருவர் அவர் ஆருயிர் நண்பனின் மகன் என்று கண்ணீருடன் பகிர்கிறார்.
நகர மேயர் ஆன்டாய்லி ஃபெட்ரோக் (Anatoliy Fedoruk) கூறுகையில், இங்குள்ள 300க்கும் மேற்பட்டவர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டனர். மேலும், ஒரு சர்ச்க்கு அருகில் பெரிய அளவிலான இடம் இறந்த உடல்களை புதைப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.
இங்குள்ள இறந்த உடல்கள் இன்னும் புதைக்கப்படாமல் இருப்பது ஏன் என்பதற்கு தெளிவான காரணங்கள் தெரியவில்லை.