கடுப்பேத்துறார் மை லார்ட்! எழுவதும், செலவு செய்வதும்தான் வேலை: ஒருநாள் பாக்கெட் மணி வெறும் 40 லட்சமாம்!
நியூயார்க்கினைச் சேர்ந்த லிட்டில் பிரின்செஸ்க்கு ஒரு நாள் பாக்கெட் மணி 40 லட்சம். தினமும் எழுவது செலவு செய்வது தான் எனது வேலை எனவும் கூறியுள்ளார்.
நியூயார்க்கினைச் சேர்ந்த லிட்டில் பிரின்செஸ்க்கு ஒரு நாள் பாக்கெட் மணி 40 லட்சம். தினமும் எழுவது, செலவு செய்வது தான் எனது வேலை எனவும் கூறியுள்ளார்.
நியூயார்க்கை ச் சேர்ந்த ரோமா அப்டெசிலம் என்பவர் ஒரு டிக் டாக் பிரபலம். இவரை டிக் டாக்கில் இதுவரை சுமார் 79 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். இவர் தன்னை ’ஸ்டே அட் ஹோம் டாட்டர்’ என அறிவித்துக் கொள்கிறார். இவரது சமீபத்திய இன்ஸ்டா பதிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த ஆச்சரியமான செய்தி என்னவென்றால், அவரின் ஒரு நாள் பாக்கெட் மணி அமெரிக்க மதிப்பில் 50 ஆயிரம் டாலர்கள், அதாவது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய். படிக்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! இந்த லிட்டில் பிரின்செஸ் வாழ்க்கையினைத்தான் ஒருவர் வாழ்ந்து வருகிறார்.
View this post on Instagram
இந்த தகவலினை தனது இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த ரோமோ, நான் தினமும் காலையில் எழுந்து ஜிம்முக்கு போவேன். பின்னர் எனது தோழிகளுடன் ஷாப்பிங்கிற்குச் செல்வேன். இதற்காக தினமும் நான் செலவு செய்வது 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், எனவும் கூறியுள்ளார். இவரின் இந்தப் பதிவு மற்ற லிட்டில் பிரின்செஸ்களை கடுப்பேத்தியதோடு, ஏங்கவும் வைத்திருக்கிறது.
இவர் தனது மற்றொரு இன்ஸ்டா பதிவில், தனது கண் புருவங்களை அழகு படுத்த செலவு செய்த தொகையினை கூறியிருந்தார். அவர் செலவு செய்த தொகை 600 டாலர் என குறிப்பிட்டிருந்தார். அது இந்திய மதிப்பில் 47,370 ரூபாயாகும். இப்படியான லிட்டில் பிரின்செஸ் வாழ்க்கை வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்