மேலும் அறிய
சூழலியல் செயற்பாட்டாளர் க்ரேட்டா தன்பெர்க்குக்கு ரூ.24 லட்சம் மதிப்பில் வெண்கல சிலை.. மாணவர்கள் அதிருப்தி
இங்கிலாந்தில் வின்செஸ்டர் பல்கலைகழகத்தில் சூழலியல் செயற்பாட்டாளர் க்ரேட்டா தன்பெர்க்குக்கு ரூ.24 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள வெண்கல சிலைக்கு, அந்த பல்கலைகழக மாணவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Greta_Thunberg_swiss_activist
இங்கிலாந்தில் அமைந்துள்ளது வின்செஸ்டர் பல்கலைக்கழகம். இந்த பல்கலைகழகத்தில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் க்ரேட்டா தன்பெர்க்கிற்கு வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை இந்திய மதிப்பில் ரூ.24 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதை மாணவர்களும், பல்கலைக்கழக பணியாளர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள பல்கலைகழக நிர்வாகம், மாணவர்களின் நிதி ஆதரவுடனோ அல்லது பல்கலைக்கழக பணியாளர்களின் நிதியிலோ இந்த சிலை நிறுவப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















