Gotabaya Rajapaksa Escape : அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே..!
இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு பயந்து, அதிபர் கோத்தபய ராஜபக்ச தப்பியோடினார்.
இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. இன்று காலை முதல் அந்த நாட்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதிபர் மாளிகையை ஒரே நேரத்தில் ஆயிரக்ணக்கான மக்கள் முற்றுகையிட்டதால் காவல்துறையினராலும், ராணுவத்தாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், மக்களின் போராட்டத்திற்கு அச்சமடைந்த கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வ மாளிகையை விட்டு தப்பிஓடினார்.
முன்னதாக, கடந்த சில மாதங்களாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியால் தடுமாறி வந்த இலங்கையில் ஏற்பட்ட மக்களின் மிக கடுமையான போராட்டத்தால், இலங்கையின் பிரதமர் பதவியை ராஜபக்சே ராஜினாமா செய்து, விக்கிரமசிங்க பிரதமர் பொறுப்பேற்றார். ஆனாலும், கோத்தபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை, நாட்டை மறுசீரமைக்க பணிகளை மேற்கொள்வதாக அதிபர் கோத்தபய கூறினாலும், நாளுக்கு நாள் இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வந்தது.
President's House reached .....#lka #Srilanka #SriLankaProtests pic.twitter.com/MnAECygyz2
— Nawfan (@Nawfan1234) July 9, 2022
இந்த நிலையில், இன்று காலை முதல் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்கள் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்றும், கோத்தபய ராஜபக்ச அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி வந்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் வழிதெரியாமல் பிதுங்கினர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அந்த நாட்டு ராணுவமும், போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் களைக்க முயற்சித்தனர்.
#BreakingNews 🇱🇰 : Sri Lankan Protestors stormed President's Official residence
— Abdul Ahad (@OneAahad) July 9, 2022
♦️President #Gotabaya Escaped .No matter what the obstacles are, we will win.#අරගලයටජය #රටමකොළඹට#GoHomeRanil #FuelCrisisLK #EconomicCrisisLK #GoHomeGota2022 #lka #Colombo #GoHomeGota pic.twitter.com/N5rF2ezgcqஇலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களால் கோத்தபய ராஜபக்ச அச்சத்திற்கு ஆளாகினார். அங்கிருந்து, ஆம்புலன்ஸ் ஒன்று மூலமாக அவர் தப்பியோடியதாகவும், அந்த ஆம்புலன்சில் அவருடன் அவரது குடும்பத்தினரும் உடனிருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயத்தில் இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு வளைக்கக்கூடும் என்ற உளவுத்துறையின் தகவல் முன்கூட்டியே கிடைக்கப்பெற்றதால் கோத்தபய ராஜபக்ச நேற்றே ராணுவ தலைமை அலுவலகத்திற்கு தப்பிச்சென்றார் என்றும் கூறப்படுகிறது. இலங்கையில் தொடர்ந்து வன்முறை வெடித்து வரும் நிலையில், அந்த நாட்டில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்