மேலும் அறிய

srilanka petrol crisis : அடுத்த மாதம் முதல் வாகனங்கள் இயங்குவது சந்தேகம்! பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் இலங்கை..!

இந்தியா அனுப்பும் கடைசிகட்ட எரிபொருள் இந்த மாதத்துடன் முடிவடையும் சூழலில் உள்ளதால் இலங்கை கடுமையான நெருக்கடியை சந்திக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மூலமாக அந்த நாட்டு மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் எரிபொருளுக்கு கூட அந்த நாட்டு மக்கள் அவதியுறும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

மக்கள் போராட்டம், பொருளாதார நெருக்கடியால் அவதிக்குள்ளாகியுள்ள இலங்கைக்கு ஆறுதலாக இந்தியா மட்டும் உதவி வருகிறது. இலங்கையின் எரிபொருள் தேவைக்காக இந்தியா ரூபாய் 3 ஆயிரத்து 908 கோடிக்கு கடனுதவி அளித்துள்ளது. இந்தியா சார்பில் வழங்கப்பட உள்ள கடைசிகட்ட எரிபொருள் இந்த மாதம் இலங்கைக்கு சென்றடையும். இதற்கு பின்பு இலங்கை எரிபொருள் தேவைக்காக மிக கடுமையான நெருக்கடியை சந்திக்கும் நிலையில் உள்ளது.


srilanka petrol crisis : அடுத்த மாதம் முதல் வாகனங்கள் இயங்குவது சந்தேகம்! பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் இலங்கை..!

இதுதொடர்பாக, இலங்கையின் எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகரா கூறியதாவது, “ இந்தியாவின் கடனுதவி மூலம் அனுப்பப்படும் டீசல் வரும் 16-ந் தேதியும், 22-ந் தேதியும் இலங்கை வந்தடையும். கடந்த வாரம் முன்னுரிமை அடிப்படையில் 2800- 3000 மெட்ரிக டன் மட்டுமே வழங்கினோம். வரும் வாரத்திற்கு தேவையான முழு டீசல் தற்போது வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் தினசரி பெட்ரோல் தேவை 3500 டன். கடந்த செவ்வாய் முதல் நாள்தோறும் 3000 முதல் 3200 டன் மெட்ரிக் டன் பெட்ரோல் தினமும் வழங்கப்படுகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையில் அடுத்த மாதத்தில் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடங்கிய அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது தனியார் பேருந்து சேவைகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு, பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை காரணமாக பல்வேறு தனியார் பேருந்து நிறுவனங்களும் சேவைகளை நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளன.


srilanka petrol crisis : அடுத்த மாதம் முதல் வாகனங்கள் இயங்குவது சந்தேகம்! பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் இலங்கை..!

கோத்தபய அரசின் தவறான நிர்வாக நடவடிக்கையே இலங்கையின் மோசமான பொருளாதார சூழலுக்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள அந்த நாட்டு பொதுமக்கள் அவரை பதவி விலக கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்சே பதவி விலகியநிலையில், ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.

எரிபொருள் முழுவதும் தீர்ந்துவிட்டால்  அதனால் ஏற்படும் பாதிப்புகளை இலங்கை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்று தெரியவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget