Mahinda Rajapaksa: ரகசிய இடத்தில் வைத்து ராஜபக்சே கைதா? - துரத்தும் நீதிமன்ற வழக்கு! இலங்கையில் பரபர நகர்வுகள்!
இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சேவை கைது செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளதார நெருக்கடி காரணமாக அங்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு காரணமாக மக்கள் தொடர்ந்து வீதியில் போராடி வருகின்றனர். இலங்கை பிரதமராக இருந்த மஹிந்தா ராஜபக்சே மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றது. பிரதமர் பதவியிலிருந்து ராஜபக்சே பதவி விலகினார். அதைத் தொடர்ந்து ரணி விக்ரமசிங்கே இலங்கை நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்சே பிரதமராக இருந்தபோது அரசுக்கு எதிராக அமைதியாக போராடிய நபர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் திட்டியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் பிரதமர் ராஜபக்சே மற்றும் 6 நபர்களை உடனடியாக கைது செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Sri Lanka's new PM Ranil Wickremesinghe says the economic crisis in the country is going to get worse before it gets better pic.twitter.com/FS8URkWw9a
— TRT World Now (@TRTWorldNow) May 13, 2022
இது தொடர்பாக கொழும்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது பிரதமர் ராஜபக்சேவின் இல்லத்திற்கு வெளியே மக்கள் அமைதியாக போராடிய போது அவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் மே 17ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக நீதிமன்றம் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தற்போது எங்கு இருக்கிறார் என்று சரியாக தெரியவில்லை. ஆகவே அவர் ரகசியமான இடத்தில் உள்ளதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அது ரகசியமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தியா, ரஷ்யா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடம் உதவி கேட்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அத்துடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமான சூழலை உருவாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதாவது இலங்கையில் தற்போது இருக்கும் நிலை மிகவும் மோசமாக சென்று கொண்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்