(Source: ECI/ABP News/ABP Majha)
Srilanka: தாக்குதலுக்கு தயாராகும் போராளிகளா?! தீயாய் பரவும் தகவல்! விளக்கமளித்த இலங்கை அரசு!
இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் ஒன்று பரவி வந்தது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு காரணமாக மக்கள் தொடர்ந்து வீதியில் போராடி வருகின்றனர். இலங்கை பிரதமராக இருந்த மஹிந்தா ராஜபக்சே மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றது. பிரதமர் பதவியிலிருந்து ராஜபக்சே பதவி விலகினார். அதைத் தொடர்ந்து ரணி விக்ரமசிங்கே இலங்கை நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில் இலங்கையில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்த உள்ளதாக உளவுத்துறை தகவல் இருப்பதாக ஆங்கில நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தி தொடர்பாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், “இந்த செய்தில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை. இலங்கையின் உளவுத்துறைக்கு அந்த மாதிரி தகவல் எதுவும் வரவில்லை. இந்த தகவலை இலங்கை பத்திரிகைகளும் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவலில் உண்மையில்லை” எனத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது தமிழ் ஈழ போருக்கு பிறகு தற்போது தமிழ் மக்கள் மற்றும் இலங்கை மக்களுக்கு இடையே உறவு வலுப் பெற்று வருகிறது. இந்தச் சூழலில் இதுபோன்ற தகவல்கள் அங்கு இருக்கும் அமைதியை சீர் குலைக்கும் வகையில் உள்ளதாக சில தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக, பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தியா, ரஷ்யா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடம் உதவி கேட்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அத்துடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமான சூழலை உருவாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதாவது இலங்கையில் தற்போது இருக்கும் நிலை மிகவும் மோசமாக சென்று கொண்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையில் கடந்த சில நாட்களாக எரிவாயுவிற்காக மக்கள் சுமார் 12 முதல் 18 மணி நேரங்கள் வரை காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் சிலர் எரிவாயு மையங்களில் காலி சிலிண்டர்களுடன் போராட்டம் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்