Sri Lanka Tamil War: இலங்கை உள்நாட்டு போரில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் - நமல் ராஜபக்ச
இலங்கை உள்நாட்டு போரில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உறுதுணையாக இருப்பதாக இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச-வின் மகனும், முன்னாள் எம்.பி-யுமான நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
13 ஆண்டுகள் நிறைவு:
இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டு போர், கடந்த 2009 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. போர் நிறைவடைந்து, தற்போது 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு கிழக்கு பகுதியை, தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டம் நடத்தி வந்த தமிழீழ விடுதலை புலிகளுக்கும்- ராணுவத்துக்கும் இடையிலான போர் நடைபெற்றது. இறுதிக்கட்ட போரானது முள்ளிவாய்க்கால் பகுதியில் மே 17-18 தேதிகளில் நடைபெற்றது.
நமல் ராஜபக்சே ட்வீட்:
மகிந்த ராஜபக்ச மகனும் முன்னாள் எம்.பி.யுமான நமல் ராஜபக்ச , இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, போர் முடிவடைந்து இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைகிறது. நாம் பெற்ற சுதந்திரத்தை மதிக்கும் அதேவேளை, 30 வருடங்கள் நடைபெற்ற போரில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை நாம் நினைவில் கொள்வோம். இந்நிலையில் துக்கத்தில் எல்லாக் குடும்பங்களுக்கும் உறுதுணையாக நான் நிற்கிறேன். இத்தருணத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவு கூர்கிறேன் என நமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Today marks 13 years since the end of the war & while we value the freedom achieved, we remember those we lost & disappeared in the 30 year conflict. I stand in solidarity with all families that are grieving, and remembering their loved ones.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 18, 2022
பதவி விலகிய நமல் ராஜபக்ச:
விளையாட்டு அமைச்சராக இருந்த நமல் ராஜபக்ச, கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வந்த நிலையில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ராஜினாமா செய்தார் நமல் ராஜபக்ச.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்