மேலும் அறிய

Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைவலியாக உருவெடுத்துள்ள டிராவிஸ் ஹெட் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக மட்டும் 1000 ரன்களை எடுத்துள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்ல வேண்டும் என்றால் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்கியது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றது.

1000 ரன்களை கடந்த ஹெட்:

இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி  பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வரும் ஆஸ்திரேலிய அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, டிராவிஸ் ஹெட் – ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தனர். சமீபகாலமாகவே, இந்திய அணிக்கு எதிராக மிகப்பெரிய தலைவலியாக இருப்பவர் டிராவிஸ் ஹெட்.

அவர் இந்த போட்டியில் இதுவரை முதல் இன்னிங்சில் 70 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். இந்த போட்டியில் சிறப்பாக ஆடி வரும் ஹெட் புதிய வரலாறு ஒன்றும் படைத்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 1000 ரன்களை கடந்துள்ளார். இந்த போட்டி தொடங்கும் முன்பு இந்திய அணிக்கு எதிராக அவர் 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 955 ரன்களை எடுத்திருந்தார். இந்த போட்டியின் 45 ரன்களை எட்டியபோது அவர் 1000 ரன்களை எட்டினார்.

இந்தியாவிற்கு தலைவலி:

டிராவிஸ் ஹெட் இதுவரை  இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8 சதங்கள், 17 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 413 ரன்கள் எடுத்துள்ளார். 30 வயதான டிராவிஸ் ஹெட் இதுவரை எந்த அணிக்கு எதிராகவும் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்தது இல்லை. இங்கிலாந்து அணிக்கு எதிராக 13 போட்டிகளில் ஆடி 910 ரன்களை இந்தியாவிற்கு அடுத்தபடியாக ஒரு அணிக்கு எதிராக எடுத்துள்ளார். அதேசமயம், பாகிஸ்தான் அணி டிராவிஸ் ஹெட்டை நன்றாக கையாண்டுள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிராக 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 295 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 2 முறை டக் அவுட்டாகியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிராக 9 போட்டிகளில் ஆடி 345 ரன்கள் எடுத்துள்ளார். குறிப்பாக, உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக டிராவிஸ் ஹெட் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு எதிராக தன்னுடைய கடைசி 7 இன்னிங்சில் மட்டும் 90 ரன்கள், 163 ரன்கள், 18 ரன்கள், 11 ரன்கள், 89 ரன்கள் மற்றும் 140 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்திய அணிக்க முக்கியமான போட்டிகளில் தலைவலியாக உருவெடுத்துள்ள டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்க இந்திய வீரர்கள் போராடி வருகின்றனர்.



தலைப்பு செய்திகள்

நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு பறந்த அவசர உத்தரவு!
நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு அவசர உத்தரவு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget