Ali sabri: நேற்று பதவியேற்பு.. இன்று ராஜினாமா.. இலங்கை அமைச்சரின் ஒருநாள் கூத்து! பரபர சம்பவங்கள்!
தற்காலிக அமைச்சர்களாக 4 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை உருவாக்கப்பட்டது. அதில் ஒருவராக புதிய நிதியமைச்சராக அலி சப்ரி நேற்று பதவியேற்றார்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. இலங்கை மக்கள் பலரும் தற்போதைய அரசு பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இந்தச் சூழலில் இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சே தவிர இதர அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.
இதனால் தற்காலிக அமைச்சர்களாக 4 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை உருவாக்கப்பட்டது. அதில் ஒருவராக புதிய நிதியமைச்சராக அலி சப்ரி நேற்று பதவியேற்றார். நேற்று பதவியேற்ற அவர் இன்று ராஜினாமா செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்நிலையில் அடுத்த அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே கூட்டணிக் கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்று வரும் நிலையில் ஆளும் கட்சிக்கு தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
முன்னதாக அங்கு உணவு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. அத்துடன் கடந்த மார்ச் மாதத்தில் அங்கு பணவீக்கம் சுமார் 18.5% சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. அத்துடன் உணவு பொருட்களின் விலையும் 30.1% வரை அதிகரித்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்ஷே மற்றும் இலங்கை அரசை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருந்தார். அதன்படி, “இலங்கை நாட்டின் பொது பாதுகாப்பு கருதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழி வகை செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது சமூக விரோதிகள் சிலர் போராட்டத்தை தூண்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் பல பொதுமக்கள் பங்கேற்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. மேலும் தற்போது வரை போராட்டங்கள் காரணமாக 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது இருக்கும் அரசை கழைத்துவிட்டு ஒரு இடைக்கால அரசை அதிபர் நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்