America Gun Shot: அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச் சூடு - பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை
அமெரிக்காவின் மோர்கன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், பலர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள மோர்கன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். பலர் உயிரிழந்து இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தற்போதைக்கு அந்த பகுதிக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையும்படியும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
Please Note: An active investigation is currently underway related to a report of shots being fired on or near campus. Please stay clear of the area surrounding Thurgood Marshall Hall and the Murphy Fine Arts Center and shelter in place. pic.twitter.com/MI37wuaLVV
— Morgan State University (@MorganStateU) October 4, 2023
உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், காயமடைந்தவர்களின் நிலைமை தொடர்பாக உடனடி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அதேநேரம், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ பல்கலைக்கழக வளாகத்திலோ அல்லது அதற்கு அருகாமையிலோ நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. துர்குட் மார்ஷல் ஹால், மர்பி ஃபைன் ஆர்ட்ஸ் சென்டர் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து விலகி இருங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது,