Shein Ad : இப்படி இருந்தா அசிங்கமா? கொந்தளித்த வாடிக்கையாளர்கள்.. பிரபல ஆடை நிறுவனத்துக்கு வந்த சிக்கல்..
ஷீன் பிளஸ்-சைஸ் விளம்பரத்தில் பெண் தனது ஆடைக்குள் ஒரு பெரிய வாட்டர் டிஸ்பென்சருடன் போஸ் கொடுப்பதைக் கண்டு வாடிக்கையாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
ஷீன் பிளஸ்-சைஸ் விளம்பரத்தில் பெண் தனது ஆடைக்குள் ஒரு பெரிய வாட்டர் டிஸ்பென்சருடன் போஸ் கொடுப்பதைக் கண்டு வாடிக்கையாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
உலகில் இருக்கும் மக்கள் அனைவரும் ஒரு போல இருப்பது இல்லை , ஒரு சிலர் ஒல்லியாக இருக்கலாம், ஒரு சிலர் பருமனாக இருக்கலாம். இன்றைய சமூகத்தில் உடல் பருமனாக இருந்தால் அவர்கள் பெரும்பாலும் பல முக்கிய இடங்களில் ஒதுக்கப்படுகிறார்கள் இதனை மாற்றும் முயற்சியில் பலரும் பல விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆடைகள் முதல் மாடலிங் துறை வரை இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சிலர் செய்யும் தவறுகளால் நாம் மீண்டும் பின் நோக்கி செல்கிறோம்.
ஷீன் என்ற பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம் சில்லறை விற்பனை மற்றூம் மலிவான விலைகள் மூலம் தலைப்புச் செய்திகளைத் உருவாக்குவதில் முன்னிலை பெற்றது , ஆனால் இந்த முறை ப்ளஸ் சைஸ் ஆடைக்கான விளம்பரத்தில் உடல் பருமனான பெண்களை இழிவு படுத்தும் வகையில் வெளியிட்டது நுகர்வோரைக் கவரத் தவறிவிட்டது.
பலரும் இந்த விளம்பரத்தை கண்டு கொத்தெழுந்துள்ளனர். இது போல் பருமனான பெண்களை இழிவு படுத்தாமல் ப்ளஸ் சைஸ் மாடல்களை (plus size models) பயன்படுத்தியிருக்கலாம் என கருத்து தெரிவித்தனர். ட்விட்டர் பயன் படுத்தும் ஒருவர் @karmaxkarmm இந்த பதிவை புகைப்படத்துடன் வெளியிட்டது இணையத்தில் வைரலானது.
SHEIN 😭 y’all couldn’t find y’all a plus size model??????? Wtf is THIS? 😭😭😭 pic.twitter.com/Dif12Hl5K7
— Karmakarmm💟 (@karmaxkarmm) October 26, 2022
அந்த புகைப்படத்தில் ஒரு மாடல் பழுப்பு நிற ஆடை அணிந்து அதில் ஒரு பெரிய நீல நிற வாட்டர் டிஸ்பென்சருடன் அவரது இடுப்பில் வைத்திருப்பது போல் இருக்கிறது. 95,000-க்கும் மேற்பட்ட ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் இந்த ட்வீட்டிற்கு லைக்ஸ் கொடுத்துள்ளனர். மேலும் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருவதன் மூலம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. "ஷீன் இது போன்ற செயலால் கடும் அதிருப்தி" என்று ஒருவர் கூறினார், வேரொருவர் "என்ன ஒரு வெட்க கேடான சம்பவம்." என பதிவிட்டார் "இது நிஜமாக இருக்கக்கூடாது," என்று ஒருவர் ட்வீட் செய்தார், மேலும் நான்காவது ஒருவர்: "இது உண்மையல்ல என்று சொல்லுங்கள்." ஷீனின் பிளஸ்-சைஸ் வரம்பின் ரசிகர்களாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு இந்தப் படங்கள் ஏமாற்றத்தை அளித்தன.
"பிராண்டுகள் மிகவும் தவறாகப் போவது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். மாடலிங் துறையில் இன்னும் அனுமதிக்கப்படாத பிளஸ்-சைஸ் பெண்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக @shein_official இதைச் செய்வது சரி என்று நினைக்கிறீர்களா?" மற்றொருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுபோல் பலரும் தங்கள் கருத்துக்களை விவாதங்களாக பதிவிட்டனர். இந்த செயலுக்கு பதிலளிக்கும் வகையில் ஷீன், அந்த புகைப்படத்தை நீக்கி வேறு புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். ஆனால் இதுபோன்ற பிரபலமான பிராண்டுகள் இப்படி பெண்களை இழிவு படுத்தும் சம்பவத்தில் ஈடுபட்டது ஏமாற்றத்தையே தந்துள்ளது.