எப்படி பயணம் பண்றீங்களோ, அதைவெச்சே செக்ஸ் நாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியும்.. ஆய்வு சொல்வது இதுதான்..
ஒரு நபர் தனது அலுவலகத்துக்கோ அல்லது அலுவலகத்திலிருந்து வீட்டுக்கோ, வேறு இடத்திற்கோ செல்ல எந்த வாகனப் போக்குவரத்தை பயன்படுத்துகிறார் என்பதை வைத்து அவரது செக்ஸ் நாட்டத்தைக் கண்டுபிடிக்கலாம்
ஒரு நபர் தனது அலுவலகத்துக்கோ அல்லது அலுவலகத்திலிருந்து வீட்டுக்கோ, வேறு இடத்திற்கோ செல்ல எந்த வாகனப் போக்குவரத்தை பயன்படுத்துகிறார் என்பதை வைத்து அவரது செக்ஸ் நாட்டத்தைக் கண்டுபிடித்துச் சொல்ல முடியும் எனக் கூறுகிறது ஆய்வு.
கரெக்ட்! நீங்கள் யூகிப்பது சரிதான். இந்த ஆய்வு வெளிநாட்டில் தான் செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். பிரிட்டனின் எக்ஸடர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வுக்காக ஏசிஎஸ் எனப்படும் அமெரிக்கன் கம்யூனிட்டி சர்வேயைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த சர்வேயின் தகவல் 30 லட்சம் கொடுத்த தரவுகளின் அடிப்படையில் திரட்டப்பட்டது. பல்வேறு வயதினர், பலதரப்பட்ட மக்கள்தொகையைச் சேர்ந்தவர்கள், பொருளாதாரம், வேலை, வீடு, சமூக கட்டமைப்பில் மாறுபட்டவர்கள் எனப் பலர் கொடுத்த அடிப்படையில் திரட்டப்பட்ட தகவல் அது.
அந்த தகவல்களை ஆராய்ந்த பிரிட்டன் பல்கலைக்கழக் ஆராய்ச்சியாளர்கள், போக்குவரத்து முறைக்கும் செக்ஸ் நாட்டத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் ஜர்னல் பிளஸ் ஒன் என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.
அதன் படி தன்பாலின உறவில் நாட்டம் கொண்ட ஆண்கள் 7% பேர் பொதுப் போக்குவரத்தை விரும்புகின்றனர். அதே வேளையில் தன்பாலின உறவில் நாட்டம் கொண்ட பெண்களில் 3% பேர் பொதுப் போக்குவரத்தை விரும்புகின்றனர். 13% பெண்கள் தனிப்பட்ட வாகனத்தில் பயணிக்கின்றனர். 6% ஆண்கள் தங்களின் கார், பைக்கை பயன்படுத்துகின்றனர்.
சரி ஏன் தன்பாலின, இருபாலின உறவாளர்கள் பொதுப் போக்குவரத்தை விரும்புகின்றனர் என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அதில் இந்த மாதிரியான ஜோடிகள் மற்ற ஜோடிகளைக் காட்டிலும் சூழழியல் மீது அதிக அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இது ஆச்சர்யம் அளிக்கலாம். ஆனால் இது ஆய்வின் அடிப்படையிலான தகவல் எனக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். தன்பாலின உறவாளர்கள் மத்தியில் தனிப்பட்ட முறையில் சுற்றுச்சூழல் மாசு, மாற்று எரிசக்தி போன்றவை குறித்த கேள்விகளுடன் ஆய்வு நடத்தியபோதும் அவர்களுக்கு மற்றவர்களைவிட சூழழியல் மீது அதிக அக்கறை உள்ளது தெரிய வந்துள்ளதாம். அரசாங்கங்கள் சூழியலைப் பேணுவதில் அக்கறையில்லாமல் இருப்பதாக அவர்கள் தார்மீக கோபம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
அதாவது ஹெட்டரோசெக்ஸுவல் உறவாளர்களைவிட தன்பாலின உறவாளர்கள் சூழலியல் மேல் காட்டும் ஆர்வம் வலுவானது ஆழமானது என ஆய்வுகள் கூறுகின்றனர். இதனாலேயே அவர்களில் பலரும் பொதுப் போக்குவரத்தை விரும்புகின்றனர் என்று பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வின் மையப்புள்ளியாக குறிப்பிடுகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள அரசாகங்கள் இதனை வைத்துக் கொண்டாவது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என பரிந்துரைக்கின்றனர் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள்.