மேலும் அறிய

சூரியனைச் சுற்றி புதிய அலைகள்: காரணம் தேடும் விஞ்ஞானிகள்!

சூரியனின் பிளாஸ்மா வழியாக பின்னோக்கி பயணிக்கும் ஒரு வித்தியாசமான அலையை விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர்

சூரியனைச் சுற்றி விசித்திரமான சில சம்பவங்கள் அண்மையில் நடந்து வருகின்றன. சூரியனில் இருந்து வெளியேறும் ஒரு சில அலைகள் இருக்க வேண்டியதை விட வேகமாக பயணிக்கின்றன.

சூரியனின் பிளாஸ்மா வழியாக பின்னோக்கி பயணிக்கும் ஒரு வித்தியாசமான அலையை விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அபுதாபியில் உள்ள கிரிஸ் ஹான்சன் மற்றும் அவரது குழுவினர் கடந்த சில தசாப்தங்களாக தரை மற்றும் விண்வெளி அடிப்படையிலான தொலைநோக்கிகளின் தரவுகளின் அடிப்படையில் ""high-frequency retrograde vorticity waves" எனப்படும் ஒருவகை அலைகளைக் கண்டறிந்தனர். இந்த சூரிய அலைகள் என்ன? இந்த அலைகள் பல சிறிய சுழல்களைக் கொண்டுள்ளன, அவை சூரியனைச் சுற்றி அதன் சுழற்சிக்கு எதிர் திசையில் பயணிக்கின்றன, என இந்தப் புதிய அலைகளைப் பற்றி கிரிஸ் ஹான்சன் விளக்கினார். 

விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த சுழல்கள் மற்ற அலைகளை விட மூன்று மடங்கு வேகமாக சூரியனைச் சுற்றி வருகின்றன. பிளாஸ்மா இயக்கத்தின் தற்போதைய மாதிரிகள் எதுவும் இந்த நிகழ்வை விளக்க முடியாது. இந்த ஒழுங்கற்ற அலைகளுக்கு விஞ்ஞானிகள் மூன்று சாத்தியமான விளக்கங்களைக் கூறுகின்றனர்: அவை சூரியனின் காந்தப்புலத்தால் ஏற்பட்டவை; அவை சூரியனில் உள்ள ஈர்ப்பு அலைகளிலிருந்து வெளிவருகின்றன; அல்லது பிளாஸ்மாவின் சுருக்கம் இந்த எதிர் அலைகளை உருவாக்குகிறது எனக் கணிக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இந்தக் காரணங்கள் எதுவும் தரவுகளுடன் ஒன்றுபடவில்லை. 

இதன்மூலம் தெரியவருவது என்ன? ஹான்சனின் கூற்றுப்படி, இது "சூரியனைப் பற்றிய நமது புரிதலில் ஒரு மூலப்பொருளைக் காணவில்லை" என்பதைக் குறிக்கிறது. புதிய அலைகளின் கண்டுபிடிப்பு சூரியனைப் பற்றிய புதிரை மேலும் கூட்டியுள்ளது. ஏனெனில் அவை என்ன என்பதை விளக்குவது இப்போது சவாலாக உள்ளது" என்று ஹான்சன் கூறியுள்ளார்.

காந்தம், ஈர்ப்பு மற்றும் சுருக்கம் ஆகியவற்றின் கலவையானது இந்த அலைகளை உருவாக்குகிறது என்று ஹான்சன் நம்புகிறார். பூமியின் கடலில் உள்ள ராஸ்பி அலைகள் எனப்படும் இதேபோன்ற அலைகளுடன் HFR களை ஒப்பிடுவதன் மூலம், விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் இந்த அலைகள்  குறித்த ஒரு புதிய தகவலைக் கண்டுபிடிக்க முடியும்.

நாஸா கூட அண்மையில் சூரிய குடும்பம் பற்றிய அரிய வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தது.

View this post on Instagram
 
A post shared by NASA Solar System Exploration (@nasasolarsystem)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget