Watch Video | எப்பா முடியல டா சாமி..! வாய்க்குள் இருந்து வரும் எட்டுக்கால் பூச்சி! வைரல் வீடியோ!
ஒருவரின் வாயிலிருந்து எட்டுக்கால் பூச்சி ஒன்று வெளியே வருவது பெரும் பயத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
பொதுவாக வனவிலங்குகளுக்கு மனிதர்கள் பலர் பயப்படுவார்கள். மேலும் சிலர் வீட்டில் இருக்கும் சிறிய பூச்சிகள் மற்றும் புழுக்களுக்கு அதிகமாக பயப்படுவார்கள். அதிலும் குறிப்பாக கரப்பான் பூச்சிகள், பல்லி, எட்டுக் கால் பூச்சி ஆகியவற்றிற்கு சிலர் மிகவும் பயப்படுவார்கள். அப்படி பயந்து நடுபவர்களுக்கு மத்தியில் ஒருவர் எட்டுக்கால் பூச்சியை தன்னுடைய வாயில் இருந்து எடுத்து விளையாடுகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக வன விலங்கு பூங்காவின் பாதுகாவலர் ஜெய் ப்ரூஸ் என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அவருடைய வாயில் இருந்து எட்டுக்கால் பூச்சி ஒன்று வெளியே வரும் போல் காட்சிகள்" இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த வீடியோவில் அவர் வனவிலங்கு பூங்காவில் எப்படி சில ஆபத்துகள் இருக்கிறது என்பதை கூறி பயமுறுத்தும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
View this post on Instagram
இந்த வீடியோவை தற்போது வரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்து உள்ளனர். அத்துடன் பலரும் இதை பார்க்க சற்று பயமாக உள்ளது. இது மிகவும் அறுவறுக்க தக்க செயல் என்றும் கூறி வருகின்றனர். சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதும் வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த வீடியோவும் வேகமாக வைரலாகி வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ‛நீ ஒன்னு குடு.. நான் ஒன்னு தரேன்..- புத்திசாலி குரங்கின் சேட்டை வைரல் வீடியோ !