பெண் உரிமை ஆர்வலருக்கு ஆதரவாக ட்வீட்! 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த சவூதி நீதிமன்றம்!
எதிர்வாதம் செய்த அரசு வழக்கறிஞர் , இவர் இதை மட்டும் செய்யவில்லை , ட்விட்டரில் தனது உண்மையான பெயரை பயன்படுத்தியிருக்கிறார்.
பெண் உரிமை ஆர்வலருக்கு ஆதரவாக டிவிட்டரில் குரல் எழுப்பியதற்காக சவுதி அரேபிய பெண் ஒருவருவருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
விதி மீறல் :
கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சல்மா அல்-ஷெஹாப், 34, இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். லண்டலில் தங்கி படித்துக்கொண்டிருந்த இவர் தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களை பார்க்க 2021 ஆம் ஆண்டு தாய்நாடு திரும்பியுள்ளார். அப்போது வுதிப் பெண்களின் வாகனம் ஓட்டும் உரிமைக்காகப் பிரச்சாரம் செய்த ஆர்வலருள் ஒருவரான லூஜைன் அல்-ஹத்லூல் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து ட்வீட் செய்துள்ளார். இவருக்கு ட்விட்டரில் வெறும் 2,597 ஃபாலோவர்ஸ் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் ட்வீட் வைரலானதை தொடர்ந்து "பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க , சிவில் மற்றும் தேசிய பாதுகாப்பை சீர்குலைக்க" சமூக ஊடகங்களை ஷெஹாப் பயன்படுத்தியதாக கூறி சவூதி அதிகாரிகள் அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையை பெற்றுத்தந்தனர்.
அடிக்கடி புகைப்படம் அப்லோட் செய்தவர் :
இந்த வழக்கின் மேல் முறையீட்டில் ஷெஹாப் தான் ட்விட்டர் பக்கத்தில் குறைவான ஃபாலோவர்ஸ் மட்டுமே வைத்திருப்பதாகவும் , இது எப்படி ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கேள்வி எழுப்பினார். இவரின் வாதத்திற்கு எதிர்வாதம் செய்த அரசு வழக்கறிஞர் , இவர் இதை மட்டும் செய்யவில்லை , ட்விட்டரில் தனது உண்மையான பெயரை பயன்படுத்தியிருக்கிறார். அதே போல தனது கணவர் மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவேற்றியிருக்கிறார். தவறான பதிவுகளையும் அதிகம் ஷேர் செய்திருக்கிறார். எனவே முன்பு சைபர் குற்றத்தில் ஈடுபட்ட பல் மருத்துவர் மற்றும் பல்கலைகழக விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை விட அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
34 ஆண்டுகள் சிறை தண்டனை :
விசாரணையின் அடிப்படையில் ல்மா அல்-ஷெஹாப் குற்றவாளி என உறுதி செய்த பயங்கரவாத நீதிமன்றம்
கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி அவருக்கு 34 ஆண்டு சிறைத்தண்டனையை வழங்கியது, அதைத் தொடர்ந்து 34 ஆண்டுகள் பயணத் தடையையும் விதித்துள்ளது. இது கிட்டத்தட்ட ஆயுள் தண்டனைக்கு சமம். சவூதி அரேபியேவில் பெண் உரிமைக்காக போராடிய பெண்ணிற்கு வழங்கப்பட்ட அதிகபட்ச சிறை தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்