முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாட்டி காலமானார் - அற்புத வாழ்வை கொண்டாடுவேன் என ஒபாமா புகழாரம்..
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் பாட்டி, சாரா ஒபாமா, தன்னுடைய 99 வயதில் மேற்கு கென்யாவில் காலமானார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் பாட்டி, சாரா ஒபாமா, தன்னுடைய 99 வயதில் மேற்கு கென்யாவில் காலமானார். முன்னதாக உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த அவர், கிசுமுவிலுள்ள Jaramogi Oginga Odinga மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எளிமையானவரான சாரா, உள்நாட்டுப் பள்ளி உணவகத்தில் கஞ்சி, டோனட் ஆகியவற்றை விற்று வந்தவர் என AFP நிறுவனம் தெரிவிக்கிறது. முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அதிபர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு 2018-ஆம் ஆண்டில் சாராவை அவரது கிராமத்தில் சந்திக்கச் சென்றார்.
பாட்டியின் மறைவினால் துக்கத்தில் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஒபாமா, ”அவரை நான் மாமா சாரா எனக் அழைப்பேன். அவருடைய நீண்ட அற்புதமான வாழ்வை நான் கொண்டாடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">My family and I are mourning the loss of our beloved grandmother, Sarah Ogwel Onyango Obama, affectionately known to many as “Mama Sarah” but known to us as “Dani” or Granny. We will miss her dearly, but we’ll celebrate with gratitude her long and remarkable life. <a href="https://t.co/avDY4f1PVu" rel='nofollow'>pic.twitter.com/avDY4f1PVu</a></p>— Barack Obama (@BarackObama) <a href="https://twitter.com/BarackObama/status/1376528504490196993?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 29, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
கிசுமு கிராமத்தில் விமானம் தரையிறங்க இடமில்லாததால் 2015-ஆம் ஆண்டிலிருந்து பாட்டியைக் காணமுடியாமல் போனதாக தனது பாட்டியிடம் நகைச்சுவையாக கூறியிருந்தார் ஒபாமா எனவும் AFP தெரிவிக்கிறது. ஆதரவற்றோர் கல்விக்காக பெருமளவில் உழைத்த முன்னோடியை இழந்தது பேரிழப்பு என்று கென்ய அதிபர் உஹுரு கென்யட்டா தெரிவித்துள்ளார்.