மேலும் அறிய

Pakistan: சமஸ்கிருதம் மேல் திடீர் பற்று.. பல்கலை.,யில் மகாபாரதம் பற்றிய படிப்பு.. பாகிஸ்தானுக்கு என்ன ஆச்சு?

சிந்து சமவெளி காலத்தில் இங்கு நிறைய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. நாம் அதை ஏற்க வேண்டும். அந்த மொழி எந்த ஒரு மதத்துடனும் பிணைக்கப்படவில்லை என பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம், மகாபாரதம் குறித்த படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

இந்தியா, பாகிஸ்தான் என்றால் இனம்,மொழி, கலாச்சாரம் ஆகியவை தாண்டி பகை நாடு என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. அதற்கேற்ப விருப்பத்தகாத சம்பவங்களும் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. மக்கள் தொடங்கி கிரிக்கெட் விளையாட்டு வரை மக்கள் எதிரிகளாகவே பாவிக்கப்படுகின்றனர். எனினும் ஆங்காங்கே மத நல்லிணக்கத்துக்கான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. 

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்து சென்றது. இஸ்லாமிய மக்களுக்கான முழுமையான சுதந்திர நாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பாகிஸ்தான் உருவானது. பாகிஸ்தானின் தேசிய மொழி உருது உள்ளது. அதேசமயம் அலுவல் மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தவிர பஞ்சாபி, சிந்தி, பஷ்டோ ஆகிய மொழிகள் பேசும் மக்களும் அங்கு உள்ளனர். 

மகாபாரதம் பற்றிய வகுப்பு

இந்த நிலையில் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் வரலாற்று நடவடிக்கையாக ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மகாபாரதம் மற்றும் பகவத் கீதையின் பகுதிகள் உட்பட சமஸ்கிருத வசனங்கள் உருது மொழியில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாபாரத தொலைக்காட்சி தொடரின் பாடலின் முதல் வரியான ”ஹை கதா சங்க்ரம் கி” என்பது மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த வார்த்தைகள் உலகின் நன்மைக்காகவும், தர்மம் மற்றும் அதர்மத்தின் நித்திய போராட்டத்தையும் குறிப்பதாகும். 

பாகிஸ்தானில் சமஸ்கிருதத்தின் மறுமலர்ச்சிக்குப் பின்னால் மொழி குறித்து நடைபெற்ற ஒரு மூன்று மாதப் பயிற்சி பட்டறைக்கு மாணவர்கள் மற்றும் அறிஞர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து இப்போது ஒரு முறையான பல்கலைக்கழக பாடமாக பரிணாமம் எடுத்துள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் இதை ஒரு முழு ஆண்டு பாடமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமஸ்கிருதம் நமக்கும் சொந்தமானது

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய ஃபார்மன் கிறிஸ்தவக் கல்லூரியின் ஆசிரியர் ஷாஹித் ரஷீத், “தெற்காசியப் பிராந்தியத்தின் தத்துவம், இலக்கியம் மற்றும் ஆன்மீக மரபுகளை வடிவமைத்த ஒரு மொழியைப் பற்றிய தீவிர ஆய்வை மீட்டெடுப்பதற்கான முயற்சியின் சிறிய படியாக இந்த விஷயம் பார்க்கப்பட்டாலும், இது முக்கியமான ஒன்றாக கருதுகிறோம். சமஸ்கிருத மொழியை நாம் ஏன் கற்றுக்கொள்ளக்கூடாது?, அது இந்தப் பகுதி முழுவதையும் இணைக்கும் ஒரு மொழியாக உள்ளது. சிந்து சமவெளி காலத்தில் இங்கு நிறைய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. நாம் அதை ஏற்க வேண்டும். அந்த மொழி எந்த ஒரு மதத்துடனும் பிணைக்கப்படவில்லை. எனவே அது நமக்கும் சொந்தமானது” என குறிப்பிட்டுள்ளார். 

ஆரம்பத்தில் சமஸ்கிருதம் மாணவர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் இப்போது அவர்கள் அதற்கு அடிமையாகி விட்டனர். சிலருக்கு சமஸ்கிருதம் வேறு, இந்தி வேறு என்பது அதனைப் பற்றிய புரிதல் இல்லாத வரை தெரியாது. மாணவர்கள் அதன் தர்க்கரீதியான அமைப்பைப் புரிந்துகொண்டபோது, ​​அவர்கள் மொழியை ரசிக்கத் தொடங்கினர் எனவும் அந்த பேராசியர் கூறியுள்ளார். இதனிடையே சமஸ்கிருத ஆவணங்கள் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அது பல தசாப்தங்களாக கல்வியாளர்களால் தொடப்படாமல் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

இப்போது உள்ளூர் அறிஞர்களுக்கு சமஸ்கிருதத்தில் பயிற்சி அளிக்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இன்னும் 10-15 ஆண்டுகளில், பாகிஸ்தானில் இருந்து கீதை மற்றும் மகாபாரத அறிஞர்கள் வெளிவருவதை நாம் காணலாம்

தலைப்பு செய்திகள்

Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Embed widget