Ukraine Railway Station attack: “இது குழந்தைகளுக்காக..” : எழுதிவைத்து குழந்தைகளை தாக்கியதா ரஷ்யா? கடும் கோபத்தில் உக்ரைன்..
குழந்தைகளை குறிவைத்து நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கான போர் தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைன் நகரின் பல்வேறு பகுதிகள் ரஷ்யாவின் தாக்குதலில் மோசமாக பாதிக்கப்பட்டன. கீவ் பகுதியில் உள்ள அரசு கட்டிடங்கள், கல்வி நிறுவங்கள் உள்பட பல லட்சக்கணக்கான மக்கள் போரில் மாண்டனர்.
ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நாட்டில் தாக்குதலை நடத்திவரும் நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள இரயில் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில், பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள். இந்த சம்பவம் உக்ரைன் மக்களை மிகுந்த கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்நிலையில், ரஷ்யா அனுப்பிய தாக்கும் ஏவுகணையில், “இது குழந்தைகளுக்காக” என எழுதப்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியை தந்திருக்கிறது. குழந்தைகளை குறிவைத்து நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்திருக்கிறது.
Taking bestial brutality and moral depravity to the next level, russians wrote "Revenge for the Children" on the rocket, which took the lives of 5 children...
— Defence of Ukraine (@DefenceU) April 8, 2022
The total number of Ukrainians murdered by this treaturous inhumane attack reached 50. pic.twitter.com/j77GLYSg7i
தொடர்ந்து ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமாகி வருவதால் உக்ரைன் நாட்டு மக்கள் குடும்பங்களை விட்டு பிரியும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைனில் இருக்கும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளின் முதுகில் குடும்ப விவரங்களை எழுதி வைத்திருக்கும் சம்பவம் மனதை உலுக்கி உள்ளது. ஒரு வேளை தாக்குதலின்போது குடும்பத்தினர் மறைந்துவிட்டாலோ, பிரிந்துவிட்டாலோ பாதுகாப்பான இடங்களை தேடிச்செல்லும் குழந்தைகளுக்கு இந்த விவரங்கள் உதவலாம் என்பதால் இது போன்று எழுதி வைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலை விரைவில் மாற வேண்டுமென உக்ரைன் மக்கள் வேண்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்