ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்ததா வட கொரியா? ஐ.நா. விதிமீறல் என வெள்ளை மாளிகை குற்றச்சாட்டு!
வட கொரியா ரஷ்யாவிற்கு வெடிமருந்துகளை "ரகசியமாக சப்ளை செய்கிறது" என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறினார்
உக்ரைன் மீது போர்தொடுத்த ரஷ்யாவிற்கு ஆதரவளிக்கும் விதமாக "கணிசமான எண்ணிக்கையிலான" பீரங்கி குண்டுகளை இரகசியமாக வட கொரியா அனுப்பியதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர்
சர்வதேச அளவில் பல மாத காலங்களாக ஏகப்பட்ட சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கும் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இரு தரப்பிலும் சாமதானத்திற்கு இடமில்லாத நிலையில், போரின் விளைவுகளை உக்ரைன் மட்டுமின்றி பலர் எதிர்கொண்டு வருகின்றனர். போர் தற்போது வேறொரு வடிவத்தை எடுத்து வரும் நிலையில், ரஷ்யா, வட கொரியாவிடமிருந்து ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகளை வாங்குகிறது என்று சில மாதங்கள் முன்னதாக அமெரிக்கா குற்றம் சாட்டி இருந்தது. தற்போது அந்த குற்றச்சாட்டை வலுப்படுத்தும் வகையில், கப்பல்களில் கணிசமான அளவில் பீரங்கி குண்டுகளை அனுப்பியதாக மேலும் கூறியுள்ளது.
வெடிமருந்து சப்ளை
வட கொரியா ரஷ்யாவிற்கு வெடிமருந்துகளை "ரகசியமாக சப்ளை செய்கிறது" என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறினார், ஆனால் "உண்மையில் கப்பல்களில் ஆயுதங்கள் அனுப்பப்பட்டதா என்பதை தீர்மானிக்க நாங்கள் இதை இன்னும் கண்காணித்து வருகிறோம்" என்று அவர் விளக்கம் தந்துள்ளார். மேலும் எந்தெந்த நாடுகள் இதற்கு உடந்தை என்றும் அவர்களிடம் பட்டியல் இருப்பதாகவும், அதனை தற்போது வெளியிட மாட்டோம் என்றும் கூறியுள்ளார். ஏனென்றால் இதற்கு பிறகு ரஷ்யாவின் அணுகுமுறையை பார்த்த பிறகு அதுகுறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகை உளவுத்துறை
வெள்ளை மாளிகை அவர்கள் அனுப்புவது குறித்து பேசவில்லை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுடனான ஏற்றுமதிக்கு தடை செய்ய முயலும் நேரத்தில் இதனை செய்ததுதான் பிரச்சனை என்று குறிப்பிடப்படுகிறது. உக்ரைனில் நடந்து வரும் சண்டைக்காக வட கொரியாவிடமிருந்து மில்லியன் கணக்கான ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வாங்கும் பணியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் முதலில் குற்றம் சாட்டினர். அதற்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு வெள்ளை மாளிகை உளவுத்துறை மூலம் கண்டறிந்தது.
மறுத்த வட கொரியா
ஆகஸ்ட் மாதம் ரஷ்ய இராணுவம் உக்ரைன் போர்க்களத்தில் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ஈரானில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டதாக ஆகஸ்ட் மாதம் ஜோ பைடென் அரசு கூறியதை அடுத்து இந்த கண்டுபிடிப்பு வெளி வந்தது. ட்ரோன்களின் செயல்பாட்டில் ரஷ்யர்களுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்க ஈரான் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு பணியாளர்களை அனுப்பியுள்ளது என்று பைடன் அரசு கூறுகிறது. ஆனால் ஈரானிய அதிகாரிகள் ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்களையோ அல்லது வேறு எந்தவிதமான ஆதரவையோ வழங்கவில்லை என மறுத்துள்ளனர்.
ஐநா விதிகளை மீறும் செயல்
ரஷ்யாவிற்கு வட கொரியா ஆயுத ஏற்றுமதி செய்தது, மற்ற நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதையோ அல்லது இறக்குமதி செய்வதையோ தடை செய்யும் ஐ.நா-வின் தீர்மானங்களை மீறும் செயலாகும். உக்ரைனில் உள்ள ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தொழில்நுட்ப பணியாளர்களை அனுப்புவதையும் கண்டித்தது. அனைத்து உறுப்பு நாடுகளும் 2019 க்குள் அனைத்து வட கொரிய தொழிலாளர்களையும் தங்கள் மண்ணில் இருந்து திருப்பி அனுப்ப வேண்டும் என்ற ஐ.நா தீர்மானத்தையும் மீறும் செயல் இது என்று குறிப்பிட்டுள்ளது.