Russia Ukraine Conflict: சத்தமில்லாமல் ஒரு உலகப்போர்.. தீப்பற்றத் தொடங்கும் உக்ரைன் - ரஷ்யா விவகாரம் - நடப்பது என்ன?
உக்ரைன் மூலமாக ரஷ்யாவை சுற்றிவளைக்கும் முயற்சிகளில் அமெரிக்கா இறங்கியுள்ளதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டி வந்தது
உக்ரைன் விவாகாரம் தொடர்பாக ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு கடும் பொருளாதார தடை விதிக்க பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.
ரஷ்யா- உக்ரைன் பதட்டத்துககன முக்கிய காரணங்கள்:
ஐரோப்பாவில் மிகப்பெரிய நாடான உக்ரைன், ரஷ்யாவுடன் எல்லைகளை பகிர்ந்துள்ளது. வரலாற்று ரீதியாக, ரஷ்யா- உக்ரைன் நட்பு நாடாக விளங்கி வந்தாலும், 1991ல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சிக்குப் பிறகு, உக்ரைன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைந்துவிட வேண்டும் என்ற விருப்பத்தை வெளிபடுத்தி வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிடம் நவீன ஆயுதங்கள் பெறுவதும், நாட்டோ (வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு)பாதுகாப்பு அமைப்புடன் ராணுவ கூட்டுப் பயிற்சியை மேற்கொள்வதும், தனது ஒட்டுமொத்த இருத்தலையே கேள்விக்குறியாக்குவதாக ரஷ்யா கருதுகிறது. உக்ரைன் மூலமாக ரஷ்யாவை சுற்றிவளைக்கும் முயற்சிகளில் அமெரிக்கா இறங்கியுள்ளதாகவும் அது குற்றஞ்சாட்டி வருகிறது.
மார்ச் 2014ல், உக்ரைன் நாட்டின் அங்கமாக விளங்கிய கிரிமியாவை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. ரஷ்யாவுடனான "மீளிணைப்பிற்கான " பொது வாக்கெடுப்பில் பெரும்பாலான கிரிமியர்கள் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்தாலும், இதனை ரஷ்யாவின் அத்துமீறலாகவே மேற்கத்திய நாடுகள் கருதி வருகின்றன. அதிலிருந்து, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கைகளை மிகுந்த அச்சஉணர்வுடன் அணுகி வருகிறது. எனவே, தற்போது உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான படைவீரர்களை குவித்து வருவதன் மூலம், உக்ரைனை கைப்பற்றக்கூடும் என்று கருத்து மேற்கத்திய நாடுகளிடம் காணப்படுகிறது.
ரஷியாவின் கோரிக்கைகள் என்ன?
1. நாட்டோ அமைப்பில் உக்ரைன் உறுப்பினராக சேர்க்கக் கூடாது.
2. சோவியத் ஒன்றியத்தின் நேச நாடுகளாக இருந்த அல்பேனிய உள்ளிட்ட எட்டு நாடுகள் நேட்டோ ஒப்பந்தத்திற்கு எதிராக 'வார்சா உடன்பாடு' (Warsaw pact) எனும் பாதுகாப்பு ஒப்பந்தத்தத்தை மேற்கொண்டனர். ஆனால், 90களின் பிற்பகுதியில் வார்சா ஒப்பந்தங்களை மீறி பல்ஜெரியா, ரோமொனியா உள்ளிட்ட நாடுகளை நாட்டோ அமைப்பு தன்னுள் இணைத்துக் கொண்டது. இதனை, மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக ரஷ்யா கருதுகிறது. எனவே, தற்போது தனது முந்தைய நேச நாடுகளிடம் இருந்து நாட்டோ அமைப்பு விலகிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை ரஷியா முன்னெடுக்கிறது.
3. தனது, எல்லையை சுற்றியுள்ள நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நாட்டோ அமைப்பின் ஏவுகணையை (Nato Missile Defence System) உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் ரஷ்யா வலியுறித்திகிறது.
4. இதனை, வெறும் உக்ரைன் விவகாரமாக மட்டும் கருதாமால், ஒட்டுமொத்த ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பில் (European Security Architecture) இருந்தும் நாட்டோ அமைப்பு பின்வாங்க வேண்டும் என்று ரஷ்யா கருதுகிறது. மேலும், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து மாற்றுப் பார்வையில் சுயாதீனாமான பாதுகாப்பு கொள்கையை வகுக்கவும் அது முனைகிறது.
எனவே, அது தற்போது உக்ரைன் விவகாரத்தில் மிக துணிச்சலாக படைகளை நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பேச்சுவார்த்தைக்கு வர நிர்பந்திக்கவும், தமக்கு இழைக்கப்பட்ட வரலாற்று பெருந்துயர்ங்களை சரி செய்யவும் இது சாதமாக அமையும் என்றும் அது கருதிகிறது.
முன்னதாக, உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ. பைடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் தொலைபேசி வாயிலாக பேச்சு நடத்தினர். இருப்பினும், இதில் எந்தவித நிரந்தர தீர்வும் ஏற்படவில்லை. மேலும், உக்ரைன் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் அமெரிக்க -ரஷியா நாடுகளின் தூதரக அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதுவும் தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில், உக்ரைனுக்கு ராணுவ ரீதியிலான உதவிகளை அமெரிக்கா துரிதப்படுத்தியுள்ளது. மேலும், இந்த வார இறுதியில் அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கள் உக்ரைன் செல்ல திட்டமிட்டுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தை உற்றுக்கவனிக்கும் உலக நாடுகள் சத்தமில்லாமல் மீண்டும் உலகப்போரா என்று கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளன