Progress MS24: ரஷ்யாவின் அடுத்த திட்டம்.. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சீறிப்பாயும் ப்ரோக்ரஸ் எம்.எஸ் 24 ராக்கெட்..
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாளை மறுதினம் ரஷ்யா ப்ரோக்ரஸ் எம்.எஸ்.24 விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் விண்வெளி வீரர்கள் தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பூமியிலிருந்து அவ்வப்போது எரிப்பொருள், உணவு, தண்ணீர் போன்றவை அனுப்பப்படும். அந்த வகையில் ரஷ்யா ப்ரோக்ரஸ் எம்.எஸ்.24 என்ற விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
While we're waiting for any news about #Luna25, let's nit forget, we have a Progress cargo ship to launch in three days. It has been already rolled out to the launch pad! #ProgressMS24 pic.twitter.com/NnkLFgaHnF
— Katya Pavlushchenko (@katlinegrey) August 20, 2023
Progress MS-24 (85P) என்பது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) செல்லும் சரக்கு விநியோகிக்க பயன்படுத்தப்படும் ராக்கெட் ஆகும். சோயுஸ் 2.1 ஏ ஏவுகணை வாகனத்தின் மீது, ரோஸ்கோஸ்மோஸ், ஆளில்லா ப்ரோக்ரஸ் எம்.எஸ். விண்கலத்தைப் பயன்படுத்தி ஏவப்படுகிறது. கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோமில் உள்ள ஏவுதள வளாகம் 31/6ல் இருந்து நாளை மறுதினம் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும். இந்த பணி ப்ரோக்ரஸ் எம்.எஸ். காப்ஸ்யூலின் 24 வது விமானத்தை குறிக்கும்.
இதற்காக ஒதுக்கப்பட்ட சோயுஸ் 2.1எ ராக்கெட் யெகாடெரின்பர்க் நகரின் 300 வது ஆண்டு நிறைவு மற்றும் சிறந்த விஞ்ஞானி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், ஏவுகணை வாகனங்கள் மற்றும் விண்கலங்களின் வடிவமைப்பாளரான விளாடிமிர் உட்கினின் 100-வது ஆண்டு விழாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரோக்ரஸ் எம்.எஸ் 24 propellant (500 கிலோ), ரோட்னிக் அமைப்புக்கான நீர் (420 கிலோ), நைட்ரஜன் (40 கிலோ) ஆகியவற்றைக் சுமந்து செல்லும். இந்த விண்கலம் 1,535 கிலோ வள உபகரணங்கள் மற்றும் கருவிகள், பரிசோதனை அமைப்புகள், ஆடைகள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்கும். ஒட்டுமொத்தமாக, இந்த ராக்கெட் சுமார் 2,495 கிலோ சரக்குகளை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லும்.ப்ரோக்ரஸ் எம்.எஸ் 24 ஆனது Soyuz 2.1a இன் மூன்றாம் நிலையிலிருந்து 9 நிமிடத்தில் விண்ணில் செலுத்தப்பட்டபின் பிரிக்கப்படும். இது இரண்டு நாட்களுக்குப் பிறகு Poisk தொகுதிக்கு (Poisk என்பது "ஆராய்வு" என்பதற்கான ரஷ்ய சொல்) தன்னாட்சியாக இணைக்கப்படும்.
Chandrayaan 3: சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நேரத்தில் திடீர் மாற்றம்.. என்ன காரணம்?