Lanka Premier League 2023: தம்புள்ளை அணியை வீழ்த்தி சாம்பியன்.. லங்கா பிரீமியர் லீக்கில் பட்டத்தை தூக்கிய கேண்டி அணி!
ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி-லுவ் கேண்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் தம்புள்ளை அவுரா அணிஐ வீழ்த்தி சாம்பியன் ஆனது.
லங்கா பிரிமீயர் லீக் 2023 இறுதிப்போட்டியானது நேற்று பி-லுவ் கேண்டி மற்றும் தம்புள்ளை அவுரா அணிகளுக்கிடையே கொழும்பின் R.K. பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி-லுவ் கேண்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் தம்புள்ளை அவுரா அணிஐ வீழ்த்தி சாம்பியன் ஆனது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தம்புள்ளை அவுரா அணி 20 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. இதை துரத்திய பி-லுவ் கேண்டி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி, பட்டத்தை தூக்கியது.
பி-லுப் கேண்டி சிறப்பான தொடக்கம்:
148 ரன்களை துரத்த களமிறங்கிய மொஹமட் ஹரிஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 39 பந்துகளில் 49 ரன்களை எடுத்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய ஹரிஸ், ஏழாவது ஓவரின் மூன்றாவது பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பின்னர், 13வது ஓவரின் நான்காவது பந்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கமிந்து மெண்டிஸ் 44 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
Wanindu Hasaranga in Lanka Premier League 2023:
— Johns. (@CricCrazyJohns) August 20, 2023
- Won the tournament as captain.
- Player of the tournament.
- Leading run getter.
- Leading wicket taker.
- Most sixes tournament award.
One of the all-time great performances in a league history. pic.twitter.com/W7JtYdqwA9
மூன்றாவது இடத்தில் களமிறங்கிய தினேஷ் சண்டிமால் 22 பந்துகளில் 3 பவுண்டரிகள் உதவியுடன் 24 ரன்கள் எடுத்து, 15வது ஓவரின் கடைசி பந்தில் பினுர பெர்னாண்டோவிடம் அவுட்டானார். நான்காவது இடத்தில் வந்த கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 21 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஐந்தாவது இடத்தில் இறங்கிய சதுரங்க டி சில்வா ரன்களை எடுக்காமாலையே பெவிலியன் திரும்பினார். ஆறாவது இடத்தில் இருந்த ஆசிப் அலி 10 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உதவியுடன் இன்னிங்ஸை 19 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தார்.
19வது ஓவரின் முதல் பந்திலேயே ஆசிப் தனது விக்கெட்டை இழக்க, ஏழாவது இடத்தில் இறங்கிய லஹிரு மதுஷங்க 3 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மதுஷங்க அணிக்கு வெற்றிகரமான ஷாட்டை அடித்து, கேண்டி அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
B-Love Kandy are the 2023 Lanka Premier League champions! Pramod bangs it in short, gets big on the batter and Madushanka is late on the pull. But he gets a top-edge and the ball flies over the keeper's head. The fireworks go off in Colombo... #LPL2023 #LPLFINAL pic.twitter.com/MQ2nzskq0o
— #AFGvPAK #LPL2023 #INDvPAK #AsiaCup #AUSvPAK (@PAKSport_Tv) August 20, 2023
தம்புள்ளை சார்பில் நூர் அஹமட் 3 விக்கெட்டுகளும், பினுர பெர்னாண்டோ 2 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் எவரும் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை.
லங்கா பிரீமியர் லீக் 2023 வனிந்து ஹசரங்காவின் சாதனைகள்:
- கேப்டனாக லங்கா பிரீமியர் லீல் பட்டத்தை வென்று கொடுத்தவர்
- பிளேயர் ஆஃப் தி டோர்னமெண்ட்
- சீசனில் அதிக விக்கெட் எடுத்த வீரர்
- சீசனில் அதிக ரன் எடுத்த வீரர்
- சீசனில் அதிக சிக்ஸர் எடுத்த வீரர் அவார்ட்
லீக் வரலாற்றில் இத்தனை சாதனைகளை படைத்த ஒரே வீரர் வனிந்து ஹசரங்காதான்.