Russia fines Google: தன்பாலின வீடியோ.. கூகுளுக்கு 3 மில்லியன் அபராதம் விதித்த ரஷ்யா..! நடந்தது என்ன?
தன்பாலீர்ப்பை ஆதரிக்கும் வகையில் இருந்த காணொளியை நீக்க மறுத்ததால் கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது
கூகுள் நிறுவனத்திற்கு ரூபாய் 3 மில்லியன் ரூபிள்களை அபராதமாக விதித்துள்ளது ரஷ்ய நீதிமன்றம். LGBT குறித்த பரப்புரை செய்த வீடியோவை யூடியூபில் இருந்து நீக்க மறுத்த காரணத்திற்காகவும் மற்றும் உக்ரேனில் ரஷ்ய ராணுவத்தைப் பற்றிய தவறான தகவல்களை யூடியூபில் வெளியிட்ட காரணத்திற்காவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்
அபராதங்களை விதிக்கும் ரஷ்யா:
அண்மைக் காலங்களில் பல்வேறு மேற்கு நாடுகளின் தனியார் நிறுவனங்களின் மேல் தொடர்ச்சியான அபராதங்களை விதித்து வருகிறது ரஷ்யா. யூட்யூப் போன்ற சமூக தளங்களில் ரஷ்யா பற்றி அதாரமில்லாமல் பரப்பப்ப்டும் தகவல்களை கட்டுப்படுத்தும் விதமாக இந்த முயற்சியை மேற்கொள்கிறது ரஷ்யா.
அந்த வகையில் அண்மையில் கூகுள் நிறுவனத்திடம் அதாவது அமெரிக்க மதிப்பில் 38,600 டாலர் அபராதம் விதித்துள்ளது ரஷ்ய நீதிமன்றம். உக்ரைனில் ரஷ்ய ராணுவம் குறித்தான தவறான தகவல்களைக் கொண்ட வீடியோவை நீக்கக் கோரியிருக்கிறது ரஷ்யா. ஆனால், கூகுள் நிறுவனம் அந்த வீடியோவை நீக்க மறுத்துள்ளது. மற்றொரு தகவல் என்னவென்றால் அண்மையில் யூ ட்யூபில் ரஷ்ய நாட்டில் தன்பாலீர்ப்பு கொண்ட தம்பதிகள் தங்களது குழந்தையை வளர்ப்பது குறித்தான் வீடியோ வெளியாகியிருந்தது. இந்த வீடியோவை யூ டியூபில் இருந்து கூகுளிடம் நீக்க கோரியிருக்கிறது ரஷ்யா. ஆனால் இந்த வீடியோவை நீக்க மறுத்துவிட்டிருக்கிறது. இந்த இரண்டு காரணங்களாக கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது ரஷ்ய நிதிமன்றம்.
வங்கிக்கணக்கு முடக்கம்:
ரஷ்யா பற்றிய எந்த ஒரு தவறான செய்தியையும் மேற்கு நாடுகள் வெளியிட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ரஷ்யா, அண்மையில் LGBT என்று சொல்லப்படும் பால்புதுமையினர் இயக்கத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது. ரஷ்ய நாட்டில் LGBTக்கு எதிராக கடுமயான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தன்பாலீர்ப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் எந்த வகையான செயல்பாடுகளும் கடுமையாம ஒடுக்கப் படுகின்றன. திரைப்படங்களிலோ, புத்தகங்களிலோ, இணையதளத்திலோ எந்த வகையிலும் தன்பாலீர்ப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எந்த செயல்பாடாக இருந்தாலும் அது அரசால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. ரஷ்யாவின் இந்த நடைமுறையை கடுமையாக எதிர்த்து வருகின்றன பல மனித உரிமை இயக்கங்கள்.
ரஷ்யாவில் அமைந்திருக்கும் கூகுளின் துணை நிறுவனத்திடம் பல்வேறு காரணங்களைக் கோரி யூட்யுபில் இருந்து காணொளிகளை நீக்கக் கோரியிருக்கிறது ரஷ்யா. ஆனால், அவற்றை நீக்க மறுத்ததான அபராதம் விதித்திருக்கிறது. இதனைக் காரணமாக காட்டி கடந்த 2021ம் அண்டு டிசம்பர் மாதம் ரஷ்யா மொத்தம் 92 .6 மில்லியன் டாலர் அடங்கிய அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கை முடக்கியுள்ளது. இதனால் கூகுளின் துணை நிறுவனம் திவாலாகிவிட்டதாக அறிவித்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள் உலகளவில் கடும் எதிர்ப்புகளை சந்தித்தி வருகிறது.