பில்கேட்ஸ் மெலிண்டா விவாகரத்து - Talk of the Town ஆனதன் பின்னணி என்ன?
பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மிலிண்டா கேட்ஸுக்கு நெருக்கமாக இருந்த மொழிப்பெயர்பாளரான Zhe 'Shelly' Wang என்ற சீன பெண்மணியின் பெயர் அடிபடத் தொடங்கியுள்ளது. இவர்களின் விவாகரத்து தொடர்பான செய்திகளில் பலரும் Zhe 'Shelly' Wang-ஐ டேக் செய்துள்ளனர்.
அமெரிக்காவின் "Talk of the town"-ஆக மாறியிருக்கிறது, உலக பணக்காரர்களில் நான்காம் இடம்பிடித்திருக்கக்கூடிய பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மிலிண்டா கேட்ஸ் இருவருக்கும் இடையிலான விவாகரத்து. விவாகரத்து பெறுவது இயல்பான ஒன்றுதான் என்றாலும், பிரபலங்கள் வாழ்வில் நடக்கும்போது அதற்கான எதிர்வினை அதிகமாக இருக்கிறது.
ஆனால் கேட்ஸ் தம்பதிகளின் 27 கால திருமண உறவில் திடீரென விரிசல் வருவதற்காக காரணம் என்ன என்பதுதான் அங்குள்ள பொதுமக்களுக்கும், பிரபலங்களுக்கும் எழுந்திருக்கக்கூடிய மிகப்பெரிய கேள்வி. கடந்த 2019-ஆம் ஆண்டு முதலே இவர்கள் இருக்கும் இடையில் விவாகரத்து பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் கடந்த மே 3-ஆம் தேதி விவாகரத்து வேண்டும் என்ற தீர்க்கமான முடிவினை வெளியிட்டனர்.
இந்த அறிவிப்பிற்கு பிறகு பில்கேட்ஸ் எவ்வாறு சொத்துக்களை பிரிப்பார், யாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும் என்பதில் மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். மேலும் கேட்ஸ் தம்பதிகளில் பிரிவிற்கு ஜெஃப்ரி எப்ஸ்டின் பில்கேட்ஸுக்கு இருந்த நட்புதான் காரணம் என கூறப்படுகிறது. ஜெஃப்ரி எப்ஸ்டின் ஒரு பிரபல தொழிலதிபர், இவரது 66-வது வயதில் பாலியல் வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றவர். சிறுமிகளை வைத்து பாலியல் நெட்வொர்க நடத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது, அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த சமயத்தில் சிறையிலேயே உயிரிழந்தார்.
ஜெஃப்ரி எப்ஸ்டின் கடந்த 2019 ஆகஸ்டில் உயிழந்தார், இவருக்கும் பில்கேட்ஸ்க்குமான நட்பு 2013 ஆண்டு முதலே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நட்பில் மனைவி மிலிண்டா கேட்ஸிற்கு விருப்பமில்லை எனத்தெரிகிறது. ஆனால் அறக்கட்டளைக்கு நிதி சேகரிப்பது தொடர்பான சந்திப்பாகத்தான் இருந்தது என பில்கேட்ஸ் தரப்பு தெரிவிக்கிறது.
இதை தவிர பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மிலிண்டா கேட்ஸுக்கு நெருக்கமாக இருந்த மொழிப்பெயர்பாளரான Zhe 'Shelly' Wang என்ற சீனப் பெண்மணியின் பெயர் அடிபட தொடங்கியுள்ளது. இவர்களின் விவாகரத்து தொடர்பான செய்திகளில் பலரும் Zhe 'Shelly' Wang ஐ டேக் செய்துள்ளனர். குறிப்பாக பில்கேட்ஸுக்கும் இவருக்குமான தொடர்புதான் தம்பதிகளின் விவாகரத்திற்கு காரணமாக செய்திகளும் வெளியாகின.
இந்நிலையில் Zhe 'Shelly' Wang இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் "விடுமுறை நாட்களை புத்தகங்கள் படித்து பயனுள்ளதாக ஆக்குங்கள், என்னை என் விடுமுறையை நிம்மதியாக கழிக்கவிடுங்கள், யாரின் குடும்ப வாழ்க்கையிலும் நான் நுழையவில்லை, இதுபோன்ற போலி செய்தியினை வெளியிட்ட அந்த செய்தியாளருக்கும் மிக்க நன்றி " என தெரிவித்துள்ளார். இதே போல ஷெல்லியின் நெருங்கிய தோழியும், அவருடன் பணிபுரிந்தவருமான Li Donglei ஷெல்லியை பார்த்து நான் நிறைய முறை பிரம்மித்திருக்கிறேன், அவள் இப்படியான செயல்களை செய்பவள் அல்ல" என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.