மேலும் அறிய

Reciprocal Tariffs: பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...

Reciprocal Tariffs Meaning: அமெரிக்க பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பரஸ்பர வரி என்றால் என்ன.? எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்பட்டுள்ளது.? பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான பரஸ்பர வரி விதிப்பை அறிவித்துள்ளார். இந்த வரிகள் வரும் 9-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரஸ்பர வரி என்றால் என்ன.? எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பொருட்களின் விலையில் மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

பரஸ்பர வரி என்றால் என்ன.?

உலகில் உள்ள ஒவ்வொரு நாடும், மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகளை விதிக்கின்றன. இந்த வரிகள் நாடுக்கு நாடு வேறுபடும். அந்தந்த நாட்டின் வரிக் கொள்கைக்கு ஏற்ப, இந்த இறக்குமதி வரிகள் விதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இந்தியா தங்களுக்கு அதிக வரி விதிப்பதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருவது உங்களுக்கு தெரியும். அவர் ஏன் அவ்வாறு கூறுகிறார் என்றால், தற்போது அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், 7.7% சுங்க வரியை எதிர்கொள்கின்றன. ஆனால், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது, அந்நாடு 2.8% வரியை மட்டுமே விதிக்கிறது. இதன்படி பார்த்தால், அமெரிக்காவைவிட, இந்தியா 4.9% அதிக வரியை அமெரிக்காவிடமிருந்து வசூலிக்கிறது.

இதேபோல், மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு அமெரிக்கா 2.4% வரியை மட்டுமே வசூலிக்கிறது. ஆனால், வியட்நாம் 75%, இந்தியா 70%, தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகள் 60% வரை வரி வசூலிக்கின்றன. இதுபோன் பல உதாரணங்களை கூறலாம்.

இந்நிலையில், இதுபோன்ற அதிக வரிகளை தான் இந்தியா உள்ளிட்ட நாடுகள் குறைக்க வேண்டும் என்று ட்ரம்ப் எதிர்பார்க்கிறார். ஆனால், இதுவரை இந்தியாவும், மற்ற நாடுகளும் எந்த முடிவையும் அறிவிக்காததால், பரஸ்பர வரி, அதாவது இந்தியா எந்த அளவிற்கு வரி விதிக்கிறதோ, அதே அளவிற்கு நாங்களும் அவர்களுக்கு வரி விதிப்போம் என்ற அடிப்படையில், தற்போது புதிய வரி அறிவிக்கப்பட்டுள்ளது. அது, இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், மற்ற நாடுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி.?

தற்போது அமெரிக்கா விதித்துள்ள வரிகளின்படி, எந்தெந்த நாடுகள் எவ்வளவு வரியை எதிர்கொள்ள உள்ளன என்பதை பார்க்கலாம்.

  • சீனா - 34%
  • ஐரோப்பிய யூனியன் - 20%
  • வியட்நாம் - 46%
  • தைவான் - 32%
  • ஜப்பான் - 24%
  • இந்தியா - 26%
  • தென் கொரியா - 25%
  • தாய்லாந்து - 36%
  • ஸ்விட்சர்லாந்து - 31%
  • இந்தோனேஷியா - 32%
  • மலேசியா - 24%
  • கம்போடியா - 49%
  • இங்கிலாந்து - 10%
  • தென்னாப்பிரிக்கா - 30%
  • பிரேசில் - 10%
  • வங்கதேசம் - 37%
  • சிங்கப்பூர் - 10%
  • இஸ்ரேல், பிலிப்பைன்ஸ் - 17%
  •  சிலி, ஆஸ்திரேலியா - 10%
  • பாகிஸ்தான் - 29%
  • துருக்கி - 10%
  • இலங்கை - 44%
  • கொலம்பியா - 10%

எந்தெந்த நாடுகளில் எந்தெந்த பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படும்

2024-ம் ஆண்டில், இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிகளில், மருந்து சூத்திரங்கள், உயிரியல், தெலைத்தொடர்பு கருவிகள், பெட்ரோலிய பொருட்கள், தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோக நகைகள், பருத்தியால் செய்யப்பட்ட ஆயத்த ஆடைகள் மற்றும் அதன் துணைக்கருவிகள், இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் ஆகியவை உள்ளன. இதனால், இந்த பொருட்கள் புதிய வரிகளால் சிறிதளவு பாதிப்பிற்கு உள்ளாகலாம். இதனால், இந்திய ஏற்றுமதி குறையவும் வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், மருந்து, இரும்பு, வாகனங்கள் போன்ற துறைகள் அதிக பாதிப்புகளை சந்திக்கும்.

மேலும், அமெரிக்காவின் புதிய வரிகள், உலகளாவிய பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால், இந்தியா, சீனா, ஐரோப்பா உள்ளிட்ட பிற நாடுகளின் வர்த்தக நிதி நிலை பாதிக்கும். உலகளாவிய வர்த்தக தடைகளும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால், பல்வேறு நாடுகளில் விலைவாசி உயரும் அபாயமும் உள்ளது.

இதனிடையே, புதிய வரிக்கொள்கை தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதில் ஏதாவது முடிவு எட்டப்பட்டு, இரு நாடுகளும் வரிகளை குறைக்கும் பட்சத்தில், நம் நாட்டில் பாதிப்புகள் குறைய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget