மேலும் அறிய

PM Modi: 'பார்வை பறிபோகும் முன் மகனை பார்க்க வேண்டும்..' பிரதமருக்கு இலங்கையிலிருந்து தாய் கண்ணீர்மல்க கோரிக்கை..!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு  திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் சாந்தனின் தாயார் பிரதமர் மோடிக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். 

சாந்தன் விடுதலை:

கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு  30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நளினி, பேரறிவாளன் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரில் கடந்தாண்டு மே மாதம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். 

தொடர்ந்து நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரை உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதிகள் விடுதலை செய்தனர். இவர்களில் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் 4 பேரும் திருச்சி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 6 மாதங்களுக்கு மேலாகியும் இவர்கள் அங்கேயே இருப்பதால் சமூக ஆர்வலர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

பிரதமருக்கு கடிதம்:

இப்படியான நிலையில், தன் சொந்தநாடான இலங்கைக்கு செல்ல அனுமதி கேட்டு  சாந்தன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் அதில் விடுதலை கிடைத்த பிறகும் கடந்த 6 மாதமாக, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். முகாமில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதை தெரிவித்து, இங்கு ரத்த உறவுகளை மட்டுமே சந்திக்க முடியும் என்கின்றனர். என்னை போல வெளிநாட்டவர்களுக்கு இந்தியாவில் எப்படி ரத்த உறவுகள் இருக்கும். எனவே சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில்  தனது மகனை தாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு சாந்தனின் தாயார் பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் . அதில், எனது இன்னொரு கண்ணும் பார்வையிழந்து போகும் முன் என் மகனை நான் பார்க்க வேண்டும். இந்திய நாட்டின் பிரதமர் எனக்கும் பிள்ளை தான். என்னை தாயாக அவர் எண்ணி எனது மகன் சாந்தனை நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை உடன் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்

ADMK Walkout; பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்சி தவறை ஞாயப்படுத்துவதா? ஆர்.பி. உதயகுமார் விளாசல்...
அதிமுக வெளிநடப்பு; பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்சி தவறை ஞாயப்படுத்துவதா? : ஸ்டாலினை விளாசிய RB உதயகுமார்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ

ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
ADMK Walkout; பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்சி தவறை ஞாயப்படுத்துவதா? ஆர்.பி. உதயகுமார் விளாசல்...
அதிமுக வெளிநடப்பு; பொள்ளாச்சி சம்பவத்தை சுட்டிக்காட்சி தவறை ஞாயப்படுத்துவதா? : ஸ்டாலினை விளாசிய RB உதயகுமார்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?

Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025

ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?

Embed widget