The Mother Heroine award: பத்து குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பரிசுத் தொகை - ரஷ்யா அறிவிப்பு!
The Mother Heroine award: ரஷ்யாவில் இரண்டாம் உலகப் போர் கால கட்டத்தில் இருந்த ‘மதர் ஹீரோயின்’ திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக அதிபர் விளாதிமிர் புதின் அறித்துள்ளார்.
ரஷ்யா நாட்டில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழல் காரணமாக 10 அல்லது அதற்கு அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ‘மதர் ஹீரோயின்’ (The Mother Heroine award) விருதுடன் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று அதிபர் விளாதிமிர் புதின் (Vladimir Putin)அறிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் போது ஏற்பட்ட உயிரிழப்பை ஈடுசெய்ய பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என சோவியத் யூனியனில் அதிபர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, அப்போது 10 குழந்தைகள் பிரசவிக்கும் ரஷ்ய பெண்களுக்கு பணமும் ‘மதர் ஹீரோயின்’ என்ற விருதும் சோவியத் யூனியனால் வழங்கப்பட்டு வந்தது. சுமார் 4 லட்சம் தாய்மார்கள் இந்த விருதினை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.1992 ஆம் ஆண்டு சோவித் யூனியனில் வளர்ச்சிக்குப் பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா- உக்ரைன் போர் குழைந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக கூறப்பட்டது. இதன் காரணமாக நாட்டில் குறைந்துவரும் குழந்தைப் பிறப்பு விகிதத்தை கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை மீண்டும் புதின் அறிமுகம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாஸ்கோ ஊடகத்தில் வெளியான செய்தியில் விளாமிதிர் புதினின் ஆணை குறித்து தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர் புதின் வெளியிட்டுள்ள ஆணையில், “ ரஷ்யாவில் உள்ள பெண்கள் 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு ’மதர் ஹீரோயின்’ விருதுடன் ரஷ்ய பண மதிப்பில் ஒரு மில்லியன் ( இந்திய மதிப்பில் ரூ. 13,12,000 - $16,000 அமெரிக்க டாலர் ) பரிசுத் தொகையாக வழங்கப்படும். இதை 10 அல்லது மேற்பட்ட குழந்தையை பெற்ற ரஷ்யாவின் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே பெறமுடியும். இந்த விருதுக்கு தகுதியானவர்கள் அவர்களின் 10-வது குழந்தைக்கு ஒரு வயது நிறைவடைந்தவுடன் அவருக்கு விருது வழங்கப்படும். ஒரே பரிவர்த்தணையில் முழு தொகையும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சர்வதேச பெண்கள் அமைப்புகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
மேலும், அதிக உறுப்பினர்களுடன் இருக்கும் குடும்பர் நாட்டுப்பற்றுடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்