மேலும் அறிய

சார்லஸ் - டயானாவின் 40 ஆண்டுகால நினைவு.. ஏலத்துக்கு வரவுள்ள திருமண கேக்.. வாவ் சொல்லவைக்கும் சுவாரஸ்யம்..!

சார்லஸ் - டயானாவின் திருமண வாழ்க்கை சில ஆண்டுகள்தான் என்றாலும், 40 ஆண்டுகளுக்கு முன்பாக அவர்களின் திருமண வைபவத்தின்பொழுது வெட்டிய சிறிய துண்டு கேக் மீண்டும் ஏலத்திற்கு வரவுள்ளது.

இளவரசர் சார்லஸ் டயானாவின் திருமண நிகழ்வில் வெட்டப்பட்ட கேக் துண்டு 40 ஆண்டுகளுக்குப்பிறகு  வருகின்ற ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஏலம் விடப்போவதாக சுவாரஸ்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிட்டிஷ் அரசின் குடும்பங்களில் ஏதாவது திருமணம் என்றாலே இங்கிலாந்தில் பெரும் விழாக்கோலமாக தான் இருக்கும். திருமணம் ஆவது தொடங்கி குழந்தைபிறக்கும் வரை இவர்களைப்பற்றிய பேச்சுகள் தான் நாட்டில் அதிகமாக இருக்கும். அந்தளவிற்கு மக்கள் முன்னிலையில் மிகவும் பிரபலமாக நடைபெறுவதுதான் வழக்கம். இதேபோன்று தான் இங்கிலாந்து ராணியின் மூத்த மகன் சார்லஸ்க்கும் – டயானாவுக்கும் நடைபெற்ற திருமணம் உலகினையே திரும்பிப்பார்க்க வைத்தது.

சார்லஸ் - டயானாவின் 40 ஆண்டுகால நினைவு.. ஏலத்துக்கு வரவுள்ள திருமண கேக்.. வாவ் சொல்லவைக்கும் சுவாரஸ்யம்..!

சாதாரண குடும்பத்தில் பிறந்து, பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர்தான் டயானா. குழந்தைகள் மீது அதீத அன்புக்கொண்ட இவர். ஆசிரியர் பணியினை சிறப்பாக மேற்கொண்டுவந்தார். இந்தச் சூழலில் தான் சார்லஸ்- டயானாவுக்கு இடையில் நட்பு மலர்ந்தது. இளவரசர் ஒருவர் ராஜகுடும்பம் இல்லாமல் சாதாரண ஒரு பெண்ணினைக் காதலித்தால் பத்திரிக்கைகள் அவர்களை சும்மாவா விடும்? அப்படித்தான் சார்லஸ் -டயானா வாழக்கையிலும் நடந்துள்ளது. நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மலரவே ராஜகுடும்பத்தின் பராம்பரிய வைரக்கல் பதித்த மோதிரத்தினை 1981-ஆம் ஆண்டில் டயானாவுக்கு அணிவித்து நிச்சயதார்த்தத்தினை நடத்தினார் சார்லஸ். இதன் பிறகு அதே ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி டயானவுக்கும், வேல்ஸ் இளவரசர் சார்லஸ்க்கும் புனித பால் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. 25 அடி நீள foot train கொண்ட உடையினை உடுத்தி ஒரு தேவதைப்போல டயானா திருமணத்தில் காட்சியளித்தார். இவர்களது திருமணத்தினை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேரடியாகவும், 750 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொலைக்காட்சிகளில் கண்டு ரசித்தனர்.   

குறிப்பாக பிரிட்ஷல் திருமண விழாக்களில் சந்தோஷத்தினை வெளிப்படுத்தும் விதமாக கேக் வெட்டும் பழக்கம் உள்ளது. அதேப்போன்று தான் இளவரசர் சார்லஸ் டயானா திருமணத்தின் போதும் அரங்கேறியது. இந்த திருமண விழாவில் வெட்டப்பட்ட கேக் துண்டின் ஒரு பகுதி மகாராணியின் ஊழியரான Moyra Smith என்பவருக்கு கொடுக்கப்பட்டது. அதில் சார்லஸ் டயானாவின் திருமணத்தேதியோடு அவர்களின் கையொப்பமிடப்பட்டிருந்தது. ராஜ குடும்பத்தின் பொக்கிஷமான இந்தக் கேக்கினை, அந்த ஊழியர் நல்ல பிளாஸ்டிக் பேப்பர் ஒன்றில் சுற்றிப்பாதுகாத்து வந்திருந்தார். கடந்த 2௦௦8 ஆம் ஆண்டு Moyra இடமிருந்து அந்த கேக் துண்டை பழங்கால பொருள் சேமிக்கும் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில் அந்த  நிறுவனம் தற்போது அரச குடும்பத்தார் வழங்கப்பட்ட கேக் மீண்டும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி  ஏலத்துக்கு வர உள்ளது என்றும் அறிவித்துள்ளனர். மேலும் இந்த கேக் 300 பவுண்டுகள் ($ 418) முதல் 500 பவுண்டுகள் ($ 697) வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கேக் அதே நிலையில் இருந்தாலும் இதனை யாரும் சாப்பிடக்கூடாது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சார்லஸ் - டயானாவின் 40 ஆண்டுகால நினைவு.. ஏலத்துக்கு வரவுள்ள திருமண கேக்.. வாவ் சொல்லவைக்கும் சுவாரஸ்யம்..!

இங்கிலாந்து மக்களின் மனதினை கொள்ளை கொண்ட டயானா princess heart, England rose என்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். சார்லஸ் -டயானா இருவரும் 1991-ஆம் ஆண்டில் பிரிந்து 1996-ஆம் ஆண்டில் விவகாரத்து, பெற்றாலும் மக்கள் டயானா மீது வைத்த அன்பு ஒருபொழுதும் மாறவில்லை என்று தான் கூறவேண்டும். கார் விபத்தில் டயானா மரணம் அடைந்த சம்பவம் இன்று வரை மர்மமாகவே நீடிக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget