PM Modi: தோழியின் புத்தகத்திற்கு முன்னுரை...மோடி சொன்ன அந்த வார்த்தை! சந்தோஷத்தில் இத்தாலி பிரதமர்!
PM Modi: இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் சுயசரிதையான "நான் ஜியோர்ஜியா - எனது வேர்கள், எனது கொள்கைகள்"என்ற புத்தகத்தின் இந்தியப் பதிப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார்.

PM Modi: இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் சுயசரிதையான "நான் ஜியோர்ஜியா - எனது வேர்கள், எனது கொள்கைகள்"என்ற புத்தகத்தின் இந்தியப் பதிப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார். அவரை ஒரு "தேசபக்தர் மற்றும் சிறந்த சமகாலத் தலைவர்" என்று பாராட்டி, அவரது தனிப்பட்ட மற்றும் அரசியல் பயணம் இந்தியர்களுடன் ஆழமாக எதிரொலிக்கிறது என்று மோடி கூறியுள்ளார்.
மெலோனியாவின் சுயசரிதை:
இத்தாலி பிரதமர் மெலோனியா மற்றும் இந்திய பிரதமர் மோடி இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. மோடியை பல இடங்களில் பெருமையாக பேசு வருபவர் மெலோனியா. இச்சூழலில் தான் தன்னுடைய சுயசரிதையை அவர் எழுதியுள்ளார். அதாவது ‘ நான் ஜியோர்ஜியா - எனது வேர்கள், எனது கொள்கைகள்’ I am Giorgia — My Roots, My Principles) என்ற பெயரில் அந்த புத்தகத்தை வெளியிட உள்ளார். இந்த புத்தகம் பல்வேறு நாடுகளில் வெளியாக உள்ளது.
முன்னுரை எழுதிய மோடி:
மெலோனியின் புத்தகத்திற்கு அமெரிக்க பதிப்பிற்கு டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் முன்னுரை எழுதியுள்ளார். அதேபோல், இந்திய பதிப்பிற்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியிருக்கிறார். அதில், ”இந்தப் புத்தகம் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் மன் கி பாத். இது அவரின் தனிப்பட்ட வாழ்க்கைக் கதைக்கும் பொது வாழ்க்கைக்குமான ஒரு தொடர்பை விளக்குகிறது. மெலோனி சிறந்த தேசபக்தர் மற்றும் சிறந்த சமகாலத் தலைவர். அவருக்கு என் மரியாதையையும், பாராட்டையும், நட்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 11 ஆண்டுகளாக உலகத் தலைவர்களுடனான எனது தொடர்பின் மூலம் அறிந்துகொண்டதில் முக்கியமானது, அவர்களின் கதைகள் பெரும்பாலும் ஆழமான, உலகளாவிய கருப்பொருள்களைப் பிரதிபலிக்கின்றன. பிரதமர் மெலோனியின் வாழ்க்கையும் தலைமைத்துவமும் காலத்தால் அழியாத உண்மைகளை நமக்கு நினைவூட்டுகின்றன.இந்தியாவில் ஒரு சிறந்த சமகால அரசியல் தலைவர் மற்றும் ஒரு தேசபக்தரின் புத்துணர்ச்சியூட்டும் கதையாக நல்ல வரவேற்பைப் பெறும்”என்று கூறியுள்ளார்.





















