Video: அமெரிக்காவில் பிரதமர் பேசும்போது, கூட்டத்திலிருந்து வந்த அந்த வார்த்தை.! சிரித்த மோடி.!. வைரலாகும் வீடியோ.!
PM Modi At USA: அமெரிக்காவில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும் போது கூட்டத்தில் இருந்து ஒரு நபர் "காசி, மதுரா" என்று சத்தமாக குரல் எழுப்பினார். ஏன் அந்த குரல் என பார்ப்போம்?
அமெரிக்காவிக் பிரதமர் மோடி உரை:
குவாட் உச்சி மாநாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய கூட்டத்தில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக, நேற்று பிரதமர் மோடி அமெரிக்கா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர பங்கேற்றார்.
இதையடுத்து பிரதமர் மோடி, ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் உள்ள நாசாவ் கொலிசியத்தில் இந்திய புலம்பெயர்ந்தோர் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது "எங்கள் அரசு மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்றுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் பாரதத்தில் இது நடக்கவில்லை. பாரத மக்கள் எங்களுக்கு வழங்கிய பொறுப்பானது மிகப்பெரியது மற்றும் முக்கியமானது. இதில் மூன்றாவது முறையாக, நாம் இன்னும் பெரிய இலக்குகளை அடைய வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.
காசி - மதுரா :
அப்போது, அங்கு மோடி தனது மூன்றாவது முறையாக பிரதமராக நிர்ணயித்த இலக்குகளை பற்றி பேசும் போது பார்வையாளர்களில் இருந்து ஒரு நபர் "காசி, மதுரா" என்று சத்தமாக குரல் எழுப்பினார். அதற்கு பிரதமர் மோடி சிறியதாக புன்முறுவலை அளித்தார். அதையடுத்து , இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏன் மதுரா - காசி குரல்.?
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில்,
வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயில் ஆகியவற்றின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்து வருகிறது. இதையும் மீட்க வேண்டும் என்று பாஜகவினர் அவ்வப்போது கோரிக்கை வைத்து வருகின்றனர்.
-PM Modi : We have bigger things to do in this 3rd term
— Mr Sinha (@MrSinha_) September 22, 2024
-Someone from Audience : Kashi- Mathura?
*PM Smiles* 😂😂 pic.twitter.com/xf1xBJC1YF
இந்நிலையில், அமெரிக்காவில் பிரதமர் மோடி உரையின் போது , கூட்டத்தில் ஒருவர் சத்தமாக மதுரா - காசி என கூறிய கருத்துக்கு பிரதமர் மோடி புன்முறுவல் அளித்த காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலான வீடியோவானது, சமூக ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜக ஆதரவாளர்கள் பிரதமர் மோடி கையாண்ட விதத்தை பாராட்டினர். அதே நேரத்தில் விமர்சகர்கள் டெம்பிள் சிட்டியான அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத்ட் தொகுதியிலே பாஜக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்ற SP எம்பி அவதேஷ் பிரசாத் தோற்கடித்தது குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பல தசாப்தங்களாக, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி இறுதியாக அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் செய்தார். அப்போது 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது, பல பாஜக தலைவர்கள் தங்கள் உரைகளில், அயோத்தி ஒரு பார்வை மட்டுமே, காசி மற்றும் மதுரா இன்னும் எஞ்சியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.