உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வளர்ப்பு நாய் - இதெப்படி சாத்தியம்? என்ன நடந்தது?
டிரக்கில் சென்று கொண்டிருந்தபோது வளர்ப்பு நாயே உரிமையாளரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும்பாலானோர் வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, அமெரிக்காவில் பெரும்பாலோனார் வீடுகளில் செல்லப்பிராணிகள் வீட்டில் ஒரு நபராகவே வளர்ந்து வரும். வளர்ப்பு பிராணிகள் உரிமையாளர்களை பல ஆபத்தான தருணங்களில் காப்பாற்றிய சம்பவங்களை நாம் அதிகளவில் பார்த்திருப்போம். ஆனால், உரிமையாளரை துப்பாக்கியால் நாய் சுட்டதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
வேட்டைக்கு சென்றபோது விபரீதம்:
அமெரிக்காவில் அப்படி ஒரு வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் டிரக்கில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் சென்றுள்ளார். பின்னால் உள்ள சீட்டில் அவர் வளர்த்த நாயை உட்கார வைத்திருந்தார். அந்த இளைஞர் வேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.
அவரது செல்லப்பிராணி அருகே வேட்டைக்கு செல்வதற்காக அவர் கொண்டு சென்ற துப்பாக்கியும் இருந்தது. தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்த அந்த துப்பாக்கியை தயார் நிலையிலே அந்த இளைஞர் வைத்திருந்தார். இந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்த நாய் இருக்கையில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தபோது துப்பாக்கியின் ட்ரிக்கரை மிதித்துள்ளது. அப்போது, வேட்டைக்காக தோட்டாக்கள் நிரப்பப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியில் இருந்து தோட்டா சீறிப்பாய்ந்தது.
உரிமையாளரை சுட்டுக்கொன்ற நாய்:
சீறிப்பாய்ந்த தோட்டாக்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த இளைஞர் மீது பாய்ந்தது. இதில், சம்பவ இடத்திலே ரத்தம் வெளியேறிய நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வளர்ப்பு நாயே உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகிலேயே துப்பாக்கி கலாச்சாரம் அதிகளவில் உள்ள நாடுகளில் அமெரிக்கா முதன்மையான இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசாங்கம் எடுத்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் துப்பாக்கி கைத்தவறி சுட்டதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக செல்லப்பிராணிகளான நாய்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்து உரிமையாளர்களின் உயிர்களை பல ஆபத்தான தருணங்களில் நாம் அறிந்திருப்போம். ஆனால், வினோதமாக நிகழ்ந்துள்ள இந்த சம்பவத்தால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: Google Lay off: கூகுள் பணிநீக்கம் செய்த 8 மாத கர்ப்பிணி.. அடுத்து நடந்தது என்ன? வைரலாகும் கண்ணீர் பதிவு
மேலும் படிக்க: Earth : நின்று எதிர்திசையில் சுழலும் பூமி: 35 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் அரிய நிகழ்வு: மாற்றங்கள் என்ன?