Pakistan Petrol Price : இலங்கையாக உருவெடுக்கும் பாகிஸ்தான்... வரலாறு காணாத உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை... மக்கள் அவதி...!
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமான நிலையில், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
Pakistan Petrol Price : பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமான நிலையில், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி:
பாகிஸ்தானில் சில வருடங்களாகவே விலைவாசி உயர்வு காரணமாக பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த வருடத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. இது மேலும் பணவீக்கத்தை தூண்டியது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் திணறி வரும் பாகிஸ்தான், வரும் மாதத்தில் மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பாகிஸ்தானில் பெருளாதார நெருக்கடி தீவிரமாகி உள்ள நிலையில், எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.22.20 உயர்ந்து 272 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 17.20 உயர்ந்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Petrol price increased to Rs272 & Diesel price to Rs280
— Economy of Pakistan (@Pakistanomy) February 15, 2023
இதுமட்டுமின்றி, மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 12.90 உயர்ந்து 202.73 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஆயில் (light diesel) விலை லிட்டருக்கு ரூ.9.68 உயர்ந்து 196.68 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது சரிந்துள்ளதால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வானது இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருவதாக அரசு வட்டாரங்களை தெரிவித்தன.
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு
இதுமட்டுமின்றி, அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி, வெங்காயம் (482.07 சதவீதம்), சிக்கன் (101.93 சதவீதம்), தேயிலை (65.41 சதவீதம்), முட்டை (64.23 சதவீதம்), டீசல் (57.34 சதவீதம்), பாசுமதி அரிசி (56.09 சதவீதம்), பாசிப்பயறு (55.63 சதவீதம்), அரிசி மாவு (55.63 சதவீதம்)அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேறு வழியில்லை
சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) 6 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தின் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் பகுதியை தாமதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த மாதம் 170 பில்லியன் டாலர் வரி திட்டத்தை பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. கடுமையான வரி விதித்தால் மட்டுமே கடன் வழங்க முடியும் என ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளதால், இது போன்ற முடிவை எடுப்பதை தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனென்றால் , பாகிஸ்தானில் அந்நிய செலாவணி குறைந்து வருவதால் ஐ.எம்.எஃப் கடன் உதவி திட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க