Pakistan No Confidence Vote: இம்ரான் கான் ஆட்சி கவிழ்க்கப்படுமா? இன்று நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு
Pakistan No Confidence Vote: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீதான் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு இன்று நடக்கிறது.
பாகிஸ்தானில் நடக்கும் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு இன்று நடக்கிறது. இம்ராம் கான் தன் ஆட்சியைத் தக்க வைக்க, நாடாளுமன்றத்தில் தன் பெரும்பான்மையை நிரூப்பிப்பாரா, அப்படி நடக்கவில்லை என்றால் பாகிஸ்தானில் புதிய தேர்தல் நடத்தப்படுமா, அல்லது எதிர்கட்சிகள் ஆட்சி அமைக்க அனுமதி கோருமா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
பாகிஸ்தான், கடந்த ஆறு மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கட்டியை சந்தித்து வருகிறது.அங்கு நிலவும் பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு,ஆகியவற்றின் காரணமாக பிரதமர் இம்ரான் கான் மீது கடும் எதிர்ப்பு எழுந்தது. பாகிஸ்தான் நாட்டின் பண மதிப்பு 189.79 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் நிலவும் கடும் அரசியல் நெருக்கடியால், நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் முஸ்லீம் என் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றியது.
இம்ரான் கான் பதவி விலகுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் அப்படி ஏதும் முடிவெடுக்கவில்லை. இந்நிலையில், இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லாம் தீர்மானத்தின் வாக்கெடுப்பு இன்று நடக்கிறது.
Imran Khan urges PTI legislators to participate in no-confidence motion proceedings
— ANI Digital (@ani_digital) April 3, 2022
Read @ANI Story | https://t.co/R0hPHXTVDE#ImranKhan #ImranKhanPTI #NoconfidenceVote #NoTrustMotion #Pakistan #PakistanPoliticalCrisis pic.twitter.com/l4gA7tW3Au
தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆதரவு இல்லை. கூட்டணி கட்சியான பாகிஸ்தான் முத்தாஹிதா ரூவானி இயக்கம் கட்சி, இம்ரான் கான் தலைமையிலாம ஆட்சிக்கு தனது ஆதரவை திருமப பெற்றது.
நாடாளுமன்றத்தில் ஆளும் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை மொத்தம் 342. இதில் ஆட்சி அமைக்க, பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 172 ஆகும்.- ஆனால், தெஹ்ரிக் கட்சியிருக்கும் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையோ சுமார் 160தான். இந்நிலையில் இம்ரான்கான் ஆட்சி கவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், எதிர்கட்சிகள் ஆட்சி அமைக்க கோருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இன்று நடக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் எல்லா கேள்விகளுக்குமான பதில் கிடைக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்