பெண் கைதியை நிர்வாண நடனம் ஆடச் சொன்ன போலீஸ் அதிகாரி: தகவல் வெளிவர டிஸ்மிஸ்!
பெண் போலீஸ் ஷபானா இர்ஷாத் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், காவலில் வைக்கப்பட்டிருந்த பெண் கைதியுடன் மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.
பெண் போலீஸ் ஒருவர் பெண் கைதியை நிர்வாணமாக டான்ஸ் ஆட வற்புறுத்திய அதிர்ச்சி சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சிறையில் பெண் கைதியை ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நடனமாட வற்புறுத்திய பாகிஸ்தான் பெண் போலீஸ் அதிகாரி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க: Maharashtra Violence: கூடவே இருந்து குழி பறித்த நண்பர்கள்: கணவர் இல்லாத போது மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
குவெட்டாவின் ஜின்னா நகரில் குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் போலீஸ் அதிகாரி, பாரி குல் என்ற பெண்ணை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததுள்ளார். அந்தப் பெண் காவலில் இருந்தபோது, பெண் போலீஸ் அதிகாரி ஷபானா, அவரை நிர்வாணமாக்கியதோடு மட்டுமல்லாமல், சிறையில் மற்றவர்கள் முன் நிர்வாணமாக நடனமாடவும் வற்புறுத்தியுள்ளார். மேலும் படிக்க: WB Suicide Case: ஒரே நேரத்தில் 4 பெண்களுடன்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!
இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியான பிறகு, காவல் துறை விசாரணைக் குழு அமைத்தது. இதன்பிறகு, பெண் போலீஸ் ஷபானா இர்ஷாத் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், காவல்துறை காவலில் வைக்கப்பட்டிருந்த பெண் கைதியுடன் மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது நீதிமன்றத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும், பெண் போலீஸ் அவர் பணியில் இருந்து வலுக்கட்டாயமாக ஓய்வு பெறப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார் எனவும் குவெட்டாவின் துணைக் காவல் கண்காணிப்பாளர் முகமது அசார் அக்ரம் கூறினார்.மேலும் படிக்க: IIT Graduate Arrest : 'போன் கீழ விழுந்து ட்வீட்டாகிட்டு' . கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஐ.ஐ.டி. பட்டதாரி!
மேலும், "ஒரு பெண் போலீஸ் சக பெண்ணிடம் இப்படிச் செய்து, அவருடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதை பொறுத்துக் கொள்ள முடியாது. சிறையில் இருக்கும் பெண் கைதியை ஒரு பெண் போலீசார் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்பதை நாங்கள் கட்டாயமாக்கியுள்ளோம்" என்றும் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்