மேலும் அறிய

IIT Graduate Arrest : 'போன் கீழ விழுந்து ட்வீட்டாகிட்டு' . கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஐ.ஐ.டி. பட்டதாரி!

விராட்கோலியில் 9 மாத மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஐ.ஐ.டி. பட்டதாரியை மும்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலககோப்பை டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது. இந்த தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளை எளிதில் வென்ற இந்தியா, சூப்பர் 12 ஆட்டத்தில் தனது முதல் இரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துடன் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக, பாகிஸ்தான் அணியுடனான தோல்வியால் உலககோப்பை இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றது இந்திய அணி மீது கடும் விமர்சனத்தை உண்டாக்கியது.

இந்த நிலையில், மர்மநபர் ஒருவர் டுவிட்டரில் இந்திய அணி தோற்றதால் இந்திய கேப்டன் விராட்கோலியின் 9 மாதங்களே ஆன மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு மிரட்டல் விடுத்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். அவதூறாக பதிவிட்ட அந்த மர்மநபர் மீது மும்பை மற்றும் டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

IIT Graduate Arrest : 'போன் கீழ விழுந்து ட்வீட்டாகிட்டு' . கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஐ.ஐ.டி. பட்டதாரி!

உடனடியாக சைபர்கிரைம் போலீசார் அந்தமர்ம நபரை தேடினர். அப்போது, அந்த பதிவை பாகிஸ்தானிய பயனர் பயன்படுத்துவது போல காட்டியது. ஆனால், பின்னர் சைபர்கிரைம் போலீசாரின் தீவிர சோதனையை அந்த பதிவையிட்டது இந்தியர் என்றும் அவரது பெயர் ராம்நாகேஷ் என்பதும் தெரியவந்தது. அவர்தான் கிரிக்கிரேஸிகேர்ள் என்ற பெயரில் இந்த பதிவை பதிவிட்டுள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

ராம்நாகேஷ் யார் என்று விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ராம்நாகேஷ் ஸ்ரீனிவாஸ் அகுபதினி என்பது அவரது முழுப்பெயர் ஆகும். 23 வயதே ஆன அவர் ஹைதராபாத்தில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பட்டம் பெற்றவர். தற்போது பெங்களூரில் உள்ள முன்னணி உணவு விநியோகிக்கும் செயலியில் ஒரு மாதத்திற்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளார். அவர் இன்னும் சில நாட்களில் அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகத்தில் சேர்வதற்கு ஆயத்தமாக இருந்தார்.

இதுதொடர்பாக, ராம்நாகேஷிடம் மும்பை போலீசார் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதால் ஆத்திரத்தில் அப்படி எழுதினேன். செல்போன் கீழே விழுந்ததால் அது ட்வீட் ஆகிவிட்டது” என்று கூறியுள்ளார். அவரது இந்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

IIT Graduate Arrest : 'போன் கீழ விழுந்து ட்வீட்டாகிட்டு' . கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஐ.ஐ.டி. பட்டதாரி!

ஹைதராபாத்தில் நேற்று அவரைப் பிடித்த போலீசார் மும்பையில் உள்ள சிறையில் அவரை அடைத்துள்ளனர். ராம்நாகேஷ் படிப்பில் மிகவும் சிறந்த மாணவராக இருந்துள்ளார்.  அவர் ஐ.ஐ.டி. ஜெ.இ.இ. தேர்வில் 2367வது ரேங்க் பெற்றுள்ளார். ஐ.ஐ.டி.யிலே டாப் 10 மாணவர்களில் ஒருவராக இருந்த ராம்நாகேஷ் இரவு நேரங்களில் கூட நன்றாக படிக்கக்கூடியவர் என்றும், அவரை பெரும்பாலும் இணையவழி மூலமாகவே தொடர்பு கொள்ள முடியும் என்று அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.

ராம்நாகேஷ் கப்பிஸ்தான் ரேடியா என்ற கணக்கை தொடர்ந்து வந்ததாகவும், அதில் விராட்கோலி ரசிகர்களுக்கும், விராட்கோலியின் வெறுப்பாளர்களுக்கும் இடையே டுவிட்டர் மோதல் நடைபெற்றபோதுதான் இந்த பதிவை அவர் பதிவிட்டுள்ளார் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். ஐ.ஐ.டி.யில் படித்த பட்டதாரி இதுபோன்ற கீழ்த்தரமான பதிவை டுவிட் செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget