மேலும் அறிய

One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?

One Nation One Election HIstory: ஒரே நாடு - ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையி, ஒரே தேர்தல் குறித்தான வரலாற்றை சற்று புரட்டுவோம்.

இன்று எதிர்க்கட்சிகளின் எதிப்புக்கு மத்தியில் , மக்களவையில் ஒரே நாடு - ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே நேரத்தில் தேர்தலை இரண்டு கட்டங்களாக அமல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

முதல் கட்டம்: மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடத்துதல்

இரண்டாம் கட்டம்: நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான தேர்தலை மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப்பின் 100 நாட்களுக்குள் நடத்துதல்.

ஒரே நேரத்தில் ஒரே தேர்தல் வரலாறு:

இந்தியாவில் ஒரே நேரத்தில், நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும் மற்றும் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்துவது என்பது புதிய யோசனையா என்றால், இல்லை. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் 1951 முதல் 1967 வரையிலான காலகட்டம்வரை, ஒரே நேரத்தில்தான் நடத்தப்பட்டது.

அதாவது, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான முதல் பொதுத் தேர்தல் 1951-52 ஆம் ஆண்டில் ஒன்றாக நடத்தப்பட்டது.  

இரண்டாவது தேர்தல் 1957 ஆண்டில் ஒன்றாக நடத்தப்பட்டது.
மூன்றாவது தேர்தல் 1962 ஆண்டில் ஒன்றாக நடத்தப்பட்டது.
நான்காவது தேர்தல் 1967 ஆம் ஆண்டுல் ஆண்டில் ஒன்றாக நடத்தப்பட்டது.

One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?

சீர்குலைந்த தேர்தல் சுழற்சி:

இதையடுத்து, சிக்கல்கள் எழ ஆரபித்தன. அதாவது, 1968, 1969 ஆம் ஆண்டுகளில் சில மாநில சட்டமன்றங்கள் முன்கூட்டியே கலைக்கப்பட்டன. இதனால்  தேர்தல்களின் சுழற்சி சீர்குலைந்தது.
மேலும், நான்காவது மக்களவையும் 1972 ஆம் ஆண்டுவரை இருக்க வேண்டிய நிலையில், 1970-ல் முன்கூட்டியே கலைக்கப்பட்டது. இதையடுத்து, 1971-ல் புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டன. 

முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மக்களவையைப் போலல்லாமல், ஐந்தாவது மக்களவையின் பதவிக்காலம் 1977 வரை 352 வது பிரிவின் கீழ்  அதிக நாட்கள் நீட்டிக்கப்பட்டது. 
அதற்குப்பின், எட்டாவது, பத்தாவது, பதினான்காவது, பதினைந்தாவது  மக்களவை பதவிக்காலம் மட்டுமே முழு ஐந்து ஆண்டுகள் நீடித்தது. ஆறாவது, ஏழாவது, ஒன்பதாவது, பதினொன்றாவது, பன்னிரண்டாவது, பதின்மூன்றாவது  மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டது.

மாநில சட்டமன்றங்களும், பல ஆண்டுகளாக முன்கூட்டியே கலைத்தல், கால நீட்டிப்பு போன்ற இடையூறுகளை எதிர்கொண்டன. இந்த நடைமுறைகள் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற சுழற்சியை நிறுத்திவிட்டன.  

மீண்டும் ஒரே நேரத்தில் தேர்தல் முறை:

இந்நிலையில், தேர்தல் செலவினம் குறையும், அரசு நிர்வாகத்திறன் மேம்படும் உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி பாஜக தலைமையிலான மத்திய அரசு , ஒரே நாடு -ஒரே தேர்தல் முறையை கொண்டுவர வேண்டும் என்று, இன்று அதற்கான மசோதாவையும் மக்களவையில், மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 

மாநிலங்களின் உரிமை, கூட்டாட்சி உள்ளிட்டவை பாதிக்கப்படும் என கூறி இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட இந்திய கூட்டணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இம்மசோதாவானது, நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பபடும் என்று தகவல் தெரிவிக்கின்றன. இக்குழுவில், மசோதா குறித்து விரிவான ஆலாசனை மற்றும் ஆராய்தல் மேற்கொள்ளப்படும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget