தோல்வியில் முடிந்த கடத்தல் முயற்சி.. இளம் இந்துப்பெண் நடுத்தெருவில் சுட்டுக்கொலை - பாகிஸ்தானில் அரங்கேறிய கொடூரம்...!
18 வயது இந்து பெண் கடத்தல் முயற்சி தோல்வியடைந்ததால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் 18 வயது இந்து பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ரோஹி சுக்கூர் என்ற இடத்தில் 18 வயது இந்து பெண்ணை ஒரு கும்பல் கடத்த முயற்சித்தது. இது தோல்வியடைந்த போது சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பூஜா ஓட் என்ற அந்த சிறுமி, கடத்தல்காரர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் நடுத்தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானிய செய்தித்தாள் தி ஃப்ரைடே டைம்ஸை மேற்கோள் காட்டி பிடிஐ வெளியிட்ட செய்தியில், ஒவ்வொரு ஆண்டும், சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பல பெண்கள், குறிப்பாக சிந்துவில் உள்ள இந்துக்கள், மதத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர். பாகிஸ்தானின் சிறுபான்மை சமூகங்கள் நீண்ட காலமாக கட்டாயத் திருமணம் மற்றும் மதமாற்றம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
2013 மற்றும் 2019 க்கு இடையில் 156 கட்டாய மதமாற்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும்
சிந்து அரசாங்கம் 2019 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக கட்டாயத் திருமணம் மற்றும் மதமாற்றங்களை சட்டவிரோதமாக்க முயற்சித்தது. இருப்பினும், சில மத எதிர்ப்பாளர்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முஸ்லீம் ஆண்களை காதலித்த பின்னரே பெண்கள் மதம் மாறுகிறார்கள் என்று அவர்கள் கூறினர்.
பாகிஸ்தானில் சுமார் 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகத்தை உருவாக்கும் பாகிஸ்தானின் பெரும்பான்மையான இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் குடியேறியுள்ளனர்.
இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பல உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
மேலும் படிக்க: Crime : லண்டனில் இந்திய வம்சாவளி மாணவி படுகொலை.. காதலர் கைது.. நடந்தது என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்