மேலும் அறிய

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு குத்தாட்டம் போட காத்திருக்கும் அமெரிக்க நடிகை..!

நாட்டு நாட்டு பாட்டின் நடன அசைவுகள் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல் ஆட்டம் போடவும் வைத்தது

சினிமாத்துறைக்கு அளிக்கப்படும் உயரிய விருது ஆஸ்கர் என்று அழைக்கப்படும் அகாடமி விருதுகள். அந்த வகையில், 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை நடைபெறுகிறது. 

யார் யார் விருதுகள் வெல்வார்கள் என்ற  உச்சக்கட்ட எதிர்பார்ப்பு உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்தியாவிலிருந்து நாட்டு நாட்டு பாடல் (RRR), ஆவண குறும்படம் - த எலெஃபேண்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers), ஆவணப் படமான ஆல் தட் ப்ரீத்ஸ் (All That Breathes) என மூன்று பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. 

உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இந்தியர்கள்:

இதனால் இந்திய ரசிகர்கள் கூடுதல் எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் காத்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, ஒரிஜினல் பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்த வருகின்றனர்.

ஆனால், இந்த பிரிவில் அப்ளாஸ் (டெல் இட் லைக் எ வுமன்), ஹோல்ட் மை ஹேண்ட் (டாப் கன் மேவரிக்), லிஃப்ட் மீ அப் (பிளாக் பாதர் வகண்டா ஃபாரெவர்), மற்றும் திஸ் இஸ் எ லைஃப் (எவ்ரிதிங் எவ்ரிதிங் ஆல் அட் அட் ஒன்ஸ்) பரிந்துரைக்கப்பட்டதால் போட்டி கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், நாட்டு நாட்டு பாட்டின் நடன அசைவுகள் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல் ஆட்டம் போடவும் வைத்தது அதற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

'நாட்டு நாட்டு' பாடலுக்கு குத்தாட்டம் போட உள்ள அமெரிக்க நடிகை:

இந்நிலையில், நாளை நடைபெற உள்ள ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு அமெரிக்கா நடிகரும் நடனக் கலைஞருமான லாரன் கோட்லீப் நடனமாட உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நாட்டு நாட்டு பாடலால் ஆஸ்கார் விருதை வெல்ல முடியும். அப்படி, நடந்தால் நான் மேடைக்கு பின்னால் பைத்தியம் போல் நடனமாடுவேன்" என்றார்.

விழாவில் நடனமாடுவது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டுள்ள அவர், "நல்ல செய்தி!!! நான் OSCARS இல் நாட்டு நாட்டு பாட்டுக்கு நடமாடுகிறேன்!!!!!! உலகின் மிகவும் மதிப்புமிக்க மேடையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவியுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

ஜலக் திக்லா ஜா நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் இரண்டாம் இடத்தைப் பிடித்த லாரன், ABCD: Any Body Can Dance (2013) போன்ற படங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடலுக்காக இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் கூட்டாக பெற்றுக்கொண்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget